Advertisment

மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High court on Nadigar Sangam Election

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவில், மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”ஏற்கனவே உச்ச நீதிமன்றம் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்துள்ளது. ஆனால் மூன்றாம் பாலினத்தவர்கள் இன்னும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம்  கிடைக்காமல் உள்ளனர். ஏற்கனவே  மூன்றாம் பாலினத்தவர்க்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே கல்வி மற்றும் வேவை வாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார் கிரேஸ் பானு.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திருநங்கைகளையும், திருநம்பிகளையும் தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், எந்த ஒரு பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட வேண்டும்” எனவும் வாதிட்டார்.

இதனையடுத்து இந்த மனு மீதான கேள்விக்கு, மார்ச்-21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Transgenders Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment