ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரிசல்ட் : 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி, திமுக டெப்பாசிட் இழந்தது

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரிசல்ட் LIVE UPDATES தருகிறது, ‘ஐஇ தமிழ்’. மும்முனைப் போட்டியில், தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கும் தேர்தல் இது!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரிசல்ட் LIVE UPDATES தருகிறது, ‘ஐஇ தமிழ்’. மும்முனைப் போட்டியில், தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கும் தேர்தல் இது!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரிசல்ட் LIVE UPDATES இங்கு தருகிறோம். அதிமுக.வின் அசைக்க முடியாத தலைமையாக, தேசிய அளவில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா, பிரதிநிதித்துவம் பெற்ற தொகுதி, சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி. (ஆர்.கே.நகர்).

RK Nagar By-election Result LIVE UPDATES : ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் ஆங்கிலப் பதிவுகளை இங்கு காணலாம்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்களில் 77.68 சதவிகித வாக்குப் பதிவு நடந்தது. ஆர்.கே.நகர் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப் பதிவு இது!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக இ.மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் களம் கண்டனர். ஆளும்கட்சி சார்பில் ஓட்டுக்கு 6000 வீதம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடைசி கட்டத்தில் டிடிவி தினகரன் தரப்பில் தலா 20 ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டு, தேர்தல் முடிந்ததும் அதில் உள்ள சீரியல் எண்ணை குறிப்பிட்டு ஒரு பெரும் தொகை பெற்றுக்கொள்ள உறுதிமொழி வழங்கப்பட்டதாக தகவல்கள் கிளம்பின.

ஆர்.கே.நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு சதவிகிதம் எகிறியதற்கு பணப் பட்டுவாடாவே காரணம் என கூறப்பட்டது. தொகுதியில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் அதிமுக.வுக்கும் டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. மக்களின் நிஜமான தீர்ப்பு இன்று தெரிய வரும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில்தான் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 14 வாக்குப் பதிவு எந்திரங்கள் வீதம் மொத்தம் 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரிசல்ட் LIVE UPDATES :

மாலை 5.00 : சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் பெற்ற வாக்குகள் 89,013. மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48,306. திமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 24,651. மதுசூதனன் டெப்பாசிட் இழந்தது.

மாலை 3.05 :  12-வது சுற்று முடிவு : டிடிவி தினகரன் – 60,286, மதுசூதனன் -27,737, மருது கணேஷ் -14,481, கலைக்கோட்டுதயம் -2607, கரு நாகராஜன் -760

பிற்பகல் 2.50 : மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் பேசுகையில், ‘ஆர்.கே.நகர் அம்மாவின் கோட்டை! ஸ்பெக்டரம் ஊழல் நடந்திருப்பது உண்மை என தமிழக மக்கள் தீர்ப்பு அளித்திருப்பதாக இதை எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்றார்.

பிற்பகல் 2.30 : 10-வது சுற்று முடிவு : டிடிவி தினகரன் – 48,808, மதுசூதனன் -25,367, மருது கணேஷ் -13,015, கலைக்கோட்டுதயம் -2116, கரு நாகராஜன் -626

பிற்பகல் 2.15 : ‘திமுக.வின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டதாக’ அந்தக் கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.

பிற்பகல் 2.00 : 9-வது சுற்று முடிவு : டிடிவி தினகரன் – 44,094 , மதுசூதனன் – 22,013, மருது கணேஷ் – 11,649, கலைக்கோட்டுதயம் – 1933 , கரு நாகராஜன் – 571

பகல் 1.45 : சென்னை வந்து சேர்ந்த டிடிவி தினகரன் மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் வந்து, அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தினார். திரளான தொண்டர்கள் ஆரவாரமாக அவரை வரவேற்றனர். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

பகல் 1.00 : 7-வது சுற்று முடிவு : டிடிவி தினகரன் – 34,346 ,  மதுசூதனன் – 17,471 ,  மருது கணேஷ் – 9206 , கலைக்கோட்டுதயம் – 1509,  கரு நாகராஜன் – 485 ,  நோட்டா – 798

பகல் 12.45 : நேற்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் காலையில் மதுரை வந்து இறங்கினார். பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘ஏழரை கோடி மக்களின் மனநிலையை ஆர்.கே.நகர் மக்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்.’ என்றார்.

பகல் 12.40 : 6 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் 29,267 வாக்குகளும், மதுசூதனன் 15,184 வாக்குகளும், மருது கணேஷ் 7983 வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள். டிடிவி தினகரன் 14,083 வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார். டிடிவி தினகரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

பகல் 12.30 : 5 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் 50.36 சதவிகித வாக்குகளும், மதுசூதனன் 27.24 சதவிகித வாக்குகளும், மருது கணேஷ் 13.78 சதவிகித வாக்குகளும் பெற்றிருக்கிறார்கள்.

பகல் 12.00 : 5 சுற்றுகள் முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 24,132 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 13,057 வாக்குகளும்,  திமுக வேட்பாளர் மருது கணேஷ் 6,606 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 1245 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 408 வாக்குகளும் பெற்றுள்ளனர். டிடிவி தினகரன் 11,075 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

காலை 11.30 : 4-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 20,298 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9672 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 5091 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 10,626 வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கிறார் தினகரன். இந்த அளவில் வாக்கு சதவிகிதம் தொடர்ந்தால், திமுக டெப்பாசிட் இழக்கும் என தெரிகிறது.

காலை 11.00 : 3-வது சுற்று வாக்கு  எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 15,868 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 7033 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 3691 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி 8835 வாக்குகள் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 837 வாக்குகளும், பாஜக 220 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

காலை 10.40 : மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை மொத்தம் 18,637 வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 10,421 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் முன்னிலையில் இருக்கிறார்.

காலை 10.15 : மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. 2-வது சுற்றில் டிடிவி தினகரன் 5082 வாக்குகளும், மதுசூதனன் 1783 வாக்குகளும், மருது கணேஷ் 1142 வாக்குகளும் பெற்றனர். டிடிவி தினகரன் மொத்த முன்னிலை ஐந்தாயிரத்தை தாண்டியது. முதல் சுற்று இறுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றனர்.

காலை 9.50 : டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இப்போது உள்ளே பிரச்னை இல்லை. மீண்டும் ஏஜெண்டுகளை அனுமதித்து, வாக்கு எண்ணிக்கையை அனுமதிப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பதாக’ தெரிவித்தார்.

காலை 9.50 : வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அனைத்துக் கட்சிகளின் ஏஜெண்டுகளும், செய்தியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையம் துணை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

காலை 9.45 : அதிமுக மகளிர் அணியினர் பெருமளவில் ராணி மேரி கல்லூரி முன்பு குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காலை 9.30 : வாக்கு எண்ணிக்கை மையத்தில் நின்ற செய்தியாளர்கள், பாதுகாப்பு போலீஸார், துணை ராணுவத்தினர் மீதும் அதிமுக ஏஜெண்டுகள் தாக்குதல் நடத்தினர். ஏஜெண்டுகளை தவிர்த்து, வேறு சிலரும் வெளியே இருந்து வரவழைக்கப்பட்டு இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை சமாளிக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறுகிறார்கள்.

காலை 9.15 : 2-வது ரவுண்ட் எண்ணிக்கை தொடங்கிய நிலையிலும் டிடிவி தினகரன் முன்னிலையில் காணப்பட்டார். அப்போது திடீரென அதிமுக ஏஜெண்டுகள் தரப்பில் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடப்பதாக புகார் கூறத் தொடங்கினர். மதுசூதனன் ஆதரவு பூத் ஏஜெண்டுகள் டிடிவி தரப்பு ஏஜெண்டான செந்தில் பாலாஜியை நோக்கி முன்னேறினர். சிலர் இருக்கைகளை தூக்கி வீசினர். அதிமுக ஏஜெண்டுகள் சிலர் மீடியா நபர்களையும் மிரட்டினர். இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

RK Nagar Election Result 2017, RK Nagar Election Result, RK Nagar Election Results

RK Nagar Election Result 2017 : முன்னிலை பெற்றதும் டிடிவி தினகரன் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்

காலை 9.00 : ஆர்.கே.நகரில் முதல் ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 5339 வாக்குகளும்,  அதிமுக 2738 வாக்குகளும், திமுக 1111 வாக்குகளும் பெற்றுள்ளன. முதல் ரவுண்டிலேயே 2601 வாக்குகள் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருக்கிறார்.

 

காலை 8.45 : முதல் ரவுண்ட் எண்ண ஆரம்பித்த சிறிது நேரத்தில் டிடிவி.தினகரன் முன்னிலை வகிப்பதாக தெரிய வந்தது, உடனே தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது’ என ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.

காலை 8.05 :  ஆர்.கே. நகரில் மொத்தமே 4 தபால் வாக்குகள்தான் இருந்தன. அதில் ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. அந்த ஒரே தபால் வாக்கும் திமுக.வுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாக்கை எடுத்து அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளிடமும் காட்டிவிட்டு, மருது கணேஷின் கணக்கில் அதிகாரிகள் சேர்த்தனர்.

 காலை 8.00 : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரம் சற்று நேரத்தில் தெரிய வரலாம்.

காலை 7.30 : சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

RK Nagar By-election Result LIVE UPDATES

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்பு

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close