Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் சார்பாக நடிகர் விஷால் போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் சார்பாக நடிகர் விஷாலை போட்டியிட வைக்க தீவிர முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nadigar Sangam Elections 2019 Live Updates, Actor vishal

Nadigar Sangam Elections 2019 Live Updates, Actor Vishal

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் சார்பாக நடிகர் விஷாலை வேட்பாளராக அறிவிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. கமல் தரப்பில் இருந்து விஷாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

மீண்டும் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைத்தேர்தலின் போது, போட்டியிட்ட அதிமுக சார்பில் மதுசூதணன், திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோரும், டிடிவி தினகரன் சுயேட்ச்சையாகவும் போட்டியிடுகிறார். இவர்கள் மூவரும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சனம் செய்தார். இதையடுத்து மந்திரிகளும் அவருக்கு பதில் சொன்னார்கள். இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது உறுதி என அறிவித்தார்.

கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி ஆளம் காண விரும்புகிறார். அந்த வேட்பாளர் பிரபலமானவராக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார். அப்போது அவருக்கு கண்ணில் பட்டவர் நடிகர் விஷால்.

நடிகர் சங்க தேர்தலிலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால். தொடர்ந்து அவரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பிரபலமானவர், சினிமா கதாநாயகன் என்பதால் அவரை களத்தில் இறக்க கமல்ஹாசன் முயற்சி செய்கிறார். விஷாலிடம் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாக தெரிகிறது.

விஷாலுக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு. தனிக்கட்சி ஆரம்பிக்கலாமா என நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்கள், உடனடியாக அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட வேண்டாம். ஏதாவது ஒரு கட்சியில் சேரலாம் என்று சொல்லியுள்ளானர். டிடிவி தினகரன் தரப்பிலும் விஷாலை அரசியலுக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் கமல் தரப்பில் இருந்தும் அழைப்பு வந்ததோடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவும் கேட்டு வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment