உடலுறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது:சுகாதாரத்துறை செயலாளர்

150 இந்தியர்கள் மட்டுமே காத்திருந்தனர்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக, தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில், இந்திய மருத்துவ சங்க விழா நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”கடந்த 2 ஆண்டுகளில், 850 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் உயிர்களை காப்பதில் அரசு காப்பீடு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மதுரையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.” என்று கூறினார். தெரிவித்தார்.

விழாவில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 5 ஆயிரத்து 310 பேர் காத்திருந்ததாக பரவிய தகவல் தவறானது என்றார்.. உண்மையில் 150 இந்தியர்கள் மட்டுமே காத்திருந்தனர் என ராதாகிருஷ்ணன் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close