Advertisment

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல் வழக்கு.. கூட்டாளிகளின் ரூ.110 கோடி முடக்கம்!

டிவிஏசி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, கேசிபி இன்ஃப்ரா என்ற பெயரில் ₹109 கோடி மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் என்ற பெயரில் ரூ 1. 8 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ex minister S P Velumani case

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ. 110 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்புத்தொகை ரசீதுகளை (எஃப்.டி.ஆர்) இணைக்க, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கேசிபி இன்ஃப்ரா லிமிடெட் மற்றும் ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் (பி) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ததாகவும், வழக்கின் விசாரணையை முடிப்பதற்கு முன், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் கலைக்கப்படுவதைத் தவிர்க்க, இந்தக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என்று விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி)’ நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“இந்த நிலையான வைப்புத்தொகை 2017க்குப் பிறகுதான் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் மற்றும் செயல்படுத்துவதில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்களின் ஒரு பகுதியாக இவை சந்தேகிக்கப்படுகின்றன" என்று டிவிஏசி’ நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த மனுக்களை பரிசீலித்த சிறப்பு நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ், நிரந்தர வைப்புத்தொகையை இணைப்பதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் மற்றும் பிறரின் புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்’ வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில்’ விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம், வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கட்டுமானம், விநியோகம் மற்றும் சேவை டெண்டர் பணிகளை, தனது அதிகாரப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கி’ பெரிய அளவிலான மோசடியில் ஈடுபட்டதாக, முன்னாள் நகராட்சி நிர்வாக அமைச்சர் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, டிவிஏசி ஏராளமான ஆவணங்கள், எஃப்டிஆர்களை கைப்பற்றி முடக்கியது.

பின்னர், கேசிபி-இன் இயக்குநர்கள்’ எஃப்டிஆர்-களை முடக்க ஒரு மனுவை தாக்கல் செய்தனர், ஆனால் அது கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் தேவைகளின்படி’ சொத்துக்களை பறிமுதல் செய்ய’ நீதிமன்றத்தை நாட விசாரணை நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்குமாறு, டிவிஏசி அரசாங்கத்தை அணுகியது.

ஜனவரி 1, 2022 அன்று, நீதிமன்றத்தை நாட’ விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்துக்கு அங்கீகாரம் அளித்து அரசாங்க உத்தரவு (GO) நிறைவேற்றப்பட்டது.

டிவிஏசி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, ​​கேசிபி இன்ஃப்ரா என்ற பெயரில் ₹109 கோடி மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் என்ற பெயரில் ரூ 1. 8 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment