Advertisment

கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் : கனிமொழி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanimozhi, கனிமொழி

kanimozhi, கனிமொழி

எல்லா வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 'ஆண்களும், பெண்களும் சம அளவில் நடத்தப்பட வேண்டும். பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாக நடத்தப்படக்கூடாது'எனவும் தெரிவித்துள்ளது.

சபரிமலை தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து :

இதுகுறித்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி. கனிமொழி, "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக, கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும், இதை பின்பற்றி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

September 2018

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல சில அரசியல் தலைவர்கள் ஆதரவும், சில தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், திமுக இதனை முழு மனதுடன் வரவேற்று வருகிறது.

India Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment