சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ. கைது

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலையை அமைப்பதில் மத்திய மாநில அரசுகள் மும்முரமாக இயங்குகின்றன.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை போராட்டம் தொடர்கிறது. நில ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லி பாபுவை போலீஸார் கைது செய்தனர்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலையை அமைப்பதில் மத்திய மாநில அரசுகள் மும்முரமாக இயங்குகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மன்சூர் அலிகான் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை நில ஆர்ஜிதத்தை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், மாணவி வளர்மதி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனினும் விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபு எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் அவர் கரியமங்கலம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் டெல்லிபாபுவை வலுகட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close