மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உடல் நடலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா நேற்று காலை 9.30 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 102.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சங்கராய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்தில் நேற்று காலை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் முதல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அமைச்சர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தி.நகரில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை சங்கரய்யாவின் உடல் ஊர்வலமாக இன்று காலை கொண்டு வரப்பட்டது.
பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தைத் தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க தமிழ அரசின் முழு அரசு மரியாதை சங்கரய்யாவின் உடலுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“