Advertisment

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது

சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குனர் ஒய். சிவ அருள் துரையிடம் இறுதியாக 15 லட்சம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saravana Stores elite

Saravana Stores

Saravana Stores Elite : ஊடகவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வக்கீல்கள் எனக் கூறியதோடு, மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 10 பேரை சென்னை காவல்துறை வியாழக்கிழமை கைது செய்தது.

Advertisment

கடந்த நவம்பர் 3-ம் தேதி, ஊடகவியலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் என்று கூறிக்கொண்ட தனசேகர் தலைமையிலான கும்பல், டி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதற்காக அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கு சென்றிருக்கிறார்கள். அதோடு  கடையில் புதிய பொருட்களை வாங்கவும் விரும்பினர். ஆனால் அந்த கும்பல் போலி நகைகள் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலி நகையின் மீது அது தெரியாமல் இருக்க பவுடர் பூசியிருக்கின்றனர்.

1 கோடி வழங்காவிட்டால், போலி தங்கத்தை விற்பனை நீங்கள் விற்பதாக நாங்கள் செய்தி வெளியிடுவோம் என சரவணா ஸ்டோர்ஸ் ஊழியரை அச்சுறுத்தியுள்ளனர். கடையில் ஒரு நாடகத்தை நடத்தி, சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குனர் ஒய். சிவ அருள் துரையிடம் இறுதியாக 15 லட்சம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் 1 கோடி தரும்படி துரையை கேட்டுள்ளனர்.

கடையின் நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களையும் இந்த கும்பல் கொண்டு சென்றிருக்கிறது. கடை உரிமையாளர், மாம்பலம் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இப்போது அந்த 10 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரிகை அடையாள அட்டை இன்ன பிறவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment