சரவணா ஸ்டோர்ஸ் உட்பட 74 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை

IT Raids in Saravana Stores and Lotus Group : ஆய்வு செய்யப்படும் 74 இடங்களில் 72 இடங்கள் சென்னையில் அமைந்துள்ளது. இரண்டு இடங்கள் கோவையில் அமைந்துள்ளது

By: Updated: January 29, 2019, 12:03:49 PM

Saravana Stores IT Raids : தமிழகத்தில் 74 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரியல் எஸ்டேட் மற்றும் சூப்பர் மார்கெட் நிறுவனங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சவரணா ஸ்டோர்களிலும் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Saravana Stores IT Raids – கோவையில் இரண்டு இடங்களில் சோதனை

ஆய்வு செய்யப்படும் 74 இடங்களில் 72 இடங்கள் சென்னையில் அமைந்துள்ளது. இரண்டு இடங்கள் கோவையில் அமைந்துள்ளது. ஜி ஸ்கொயர், லோட்டஸ் க்ரூப் ரியல் எஸ்டேட்கள், மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

70 வருமானவரித் துறையினர் கொண்ட குழு, காவல்துறை உதவியுடன் இந்த வருமான வரிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  சில வாரங்களுக்கு முன்பு சரவண பவன் உணவங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மக்களுக்கு விருப்பமான உணவகங்களில் ஐ.டி. ரெய்டு.. காரணம் என்ன ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Saravana stores it raids it department raids on 74 locations of saravana stores

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X