Advertisment

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்.. திருச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ஒற்றுமை ஓட்டம்..!

திருச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Sardar Vallabhbhai Patels birthday Union Education Minister solidarity run in Trichy

மத்திய கல்வி இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு "ஒற்றுமைக்காக ஓடவும்" என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை இணைய அமைச்சர் டாக்டர்.சுபாஷ் சர்கார் ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து துவங்கி வைத்து ஓடினார்.

Advertisment

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர்.சுபாஷ் சர்க்கார் திருச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதாக நேற்று (அக்.30) மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் ஜெயந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இரவு தங்கினார். இந்த நிலையில், இன்று (அக்.31) துவாக்குடி என்ஐடி கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் ஒற்றுமைக்காக ஓடவும் என்ற ஓட்டப்பந்தயாத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து ஓடினார்.

இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேசுகையில்;

நாட்டில் 532 மாகாணங்களில் ஒருமைப் படுத்துவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் பாடுபட்டு இருக்கிறார். சர்தார் வல்லபாய் பட்டேலை பெருமைப்படுத்துவதற்காக இந்திய அரசு நாடு முழுவதும் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகளை எடுத்துரைத்து ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசித்தார். மாணவ, மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment