Advertisment

எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை: அதிமுகவில் சசிகலாவின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்குமா?

எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பேரணி நடத்திவரும் சசிகலாவின் திட்டங்களுக்கு வழி அமைத்துக்கொடுத்துள்ளது.

author-image
Balaji E
New Update
jayalalitha, aiadmk, sasikala, aiims panel report, எய்ம்ஸ், அதிமுக, ஜெயலலிதா, தமிழ்நாடு

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு அடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்ககள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களின் காலத்தில், தமிழக அரசியலில் பல வதந்திகளையும் யூகங்களையும் அரை உண்மைகளும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும், ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான வதந்திகள் சசிகலாவின் பெயர் இணைக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

Advertisment

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது. ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டது, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டை பெற்று சிறை சென்றது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது, பின்னர், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்தது. சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினரை வெளியேற்றியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைத்தது எல்லாம் பலரும் அறிந்த நிகழ்வுகளே.

ஆனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும் சசிகலாவை இணைத்து பேசப்பட்ட வதந்திகளும் அப்படியே இருந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக் குழு அண்மையில் அறிக்கை வந்துள்ளது.

அந்த அறிக்கையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சசிகலாவின் மீதான குற்றச்சாட்டுகள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. இதன் மூலம், சசிகலா மீது தவறு இல்லை என்று நிரூபனமாகியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பிப்ரவரி, 2017-இல் சசிகலா மீது அரசியல் ரீதியாக பழிபோடும் முயற்சிகள் நடந்தது என்று கூறிய திருத்தனி முன்னாள் எம்.எல்.ஏ.வும் சசிகலாவின் ஆதரவாளருமான நரசிம்மன், இப்போது உண்மை வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர், 2017-இல் சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க்கி சென்னை கூடுதல் நீதிமன்றம் ஏப்ரல் 11 ஆம் தேதி அளித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்ய உள்ளார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே மோதல் நிலவி வரும் சூழலில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை தமிழக அரசியலில் அதிமுகவில் சசிகலாவின் செல்வாக்கை மீட்டெடுக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு மாறாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முகாமைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளால் சசிகலா பலனடைய முடியாது என்கிறார்.

அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை கே. செல்வராஜ், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையின் பலனை சசிகலா அடைவாரா என்ற கேள்வி இன்னும் எழுப்பப்பட வில்லை. ஜெயலலிதாவின் மரணம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது தொண்டர்களுக்கு மிகப் பெரிய உணர்ச்சிப்பூர்வமானது.

பிபரவரி, 2017-இல் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியவர்களில் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். இருப்பினும், 5 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார். ஆனால், அவர் மக்கள் மத்தியில் இருந்த சந்தேகத்தை மட்டுமே கூறியதாக தெரிவித்தார்.

அப்போது, சசிகலா உண்மைகளை யாராலும் மாற்ற முடியாது உண்களை யாரும் மறைக்கவும் முடியாது என்ண்று கூறினார். மேலும், மக்கள் அவரை எதிர்மறையாகப் பார்த்தார்கள் என்பதை நம்பவில்லை என்று கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பேரணி நடத்திவரும் சசிகலாவின் திட்டங்களுக்கு வழி அமைத்துக்கொடுத்துள்ளது.

ஏற்கெனவே சசிகலா, பொதுமக்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். மக்கள் உண்மையை உணர்வது அதிகரித்துள்ளது. சசிகலாவால் மட்டுமே கட்சிக்கு ஒரு நல்ல தலைமையை அளிக்க முடியும். மேலும், அதிகமான மக்கள் சசிகலாவின் பக்கம் வருவார்கள் என்று நரசிம்மன் ஆங்கில செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளால் சசிகலா எந்த பலனையும் அடைய இயலாது. அவருடைய அரசியல் வாய்ப்புகள் இந்த சர்ச்சையால் மட்டுமே பாதிக்கப்படவில்லை. அவர் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று இ.பி.எஸ் அணியினர் கூறுகிறார்கள்.

இருப்பினும், ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் சசிகலாவை இணைத்து பேசப்பட்ட வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது என்பதே மக்கள் மத்தியில் சசிகலா மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Aiims Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment