Advertisment

ரத்தம் சொட்டச் சொட்ட போலீசார் அடித்தார்கள்: கணவர்- மகன் லாக்கப் மரணம் பற்றி பெண் புகார்

சாத்தான்குளம் லாக் அப் மரணம் குறித்து பெண் அளித்த புகாரில், தனது கணவர் மற்றும் மகனை காவல் நிலையத்தில் போலீசார் ஆபசமாக திட்டி ரத்தம் சொட்டச்சொட்ட அடித்ததாகவும் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் நான் யார் தெரியுமா கொம்பன் என மிரட்டி கடுமையாக அடித்தாகவும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathankulam, sathankulam news, sathankulam father- son death, kamal hassan, actor suriya press statement

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரும் சிறையில் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக, ஜெயராஜ் மனைவி செல்வராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் மற்றும் மகனை காவல் நிலையத்தில் போலீசார் ஆபசமாக திட்டி ரத்தம் சொட்டச்சொட்ட அடித்ததாகவும் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் நான் யார் தெரியுமா கொம்பன் என மிரட்டி கடுமையாக அடித்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவர் மற்றும் மகன் மரணத்துக்கு காரணமான காவலர்களை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு புகார் அளித்துள்ளார்.

Advertisment

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் நேற்று திடீரென மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை மகன் இருவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் சித்ரவதை செய்து அடித்து கொன்றதாகவும் குற்றம்சாட்டி உறவினர்கள், பொதுமக்கள் நீதிகேட்டு சாத்தான்குளத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாக் அப் மரணம் அடைந்த ஜெயராஜ் மனைவியும் பென்னிக்ஸ் இம்மானுவேல் தாயுமான செல்வராணி தனது கணவர் மற்றும் மகன் மரணம் குறித்து சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர், வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தனது கணவர் ஜெயராஜ் (59), மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31), இவர்கள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு காலத்தில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடையை அடைக்க சொல்லியுள்ளனர். எனது கணவரும் மகனும் உடனே கடையை அடைத்துவிட்டு வந்துவிட்டனர். மறுநாள் ஜூன் 20-ம் தேதி மாலை 6.30 மனிக்கு எனது கணவர் கடையில் இருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் ஜேசுராஜ் ஆகியோர் எனது கணவரை ஆபாசமாக திட்டி சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து இழுத்துச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த எனது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஏன் எனது அப்பாவை இழுத்துச் செல்கிறீர் என்று கேட்டுள்ளார். அதற்கு போலீசார் எனது மகனை காவல் நிலையத்துக்கு வா என்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் எனது கணவரை காவல் ஆய்வாலர் ஸ்ரீதர் ஆபசமாக திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதனைப் பார்த்த எனது மகன் ஏன் எனது அப்பாவை அடிக்கிறீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி காவல் ஆய்வாளர் பால்துரையிடம் எனது மகனையும் அடிக்கச் சொல்லியிருக்கிறார். இதயடுத்து, உதவி காவல் ஆய்வாலர் பால்துரை மற்றும் காவலர்கள் சேர்ந்து எனது மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர். போலீசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது.

இதனைப் பார்த்த எனது கணவர் எனது மகனை ஏன் இப்படி போட்டிஉ அடிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஆய்வாலர் ஸ்ரீதர் எனது கணவரையும் அடிக்கச் சொல்லியிருக்கிறார். எனது கணவரை கம்பால் அடித்து ரத்தம் சொட்டச்சொட்ட லாக் அப்பில் நிர்வானமாக அடைத்துள்ளனர்.

இரவு 11.30 மணிக்கு வந்த உதவி காவல் ஆய்வாலர் ரகு கணேஷ் நான் யார் தெரியுமா கொம்பன் என்று கூறி ஆபசமாக திட்டி அவரும் அடித்துள்ளார்.

இதனை அறிந்து நான் காவல் நிலையம் சென்று பார்த்தேன் அங்கே எனது கணவரும் மகனும் காயத்துடன் நின்றிருந்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும் என்று கூறிவிட்டார்கள்.

ஜூன் 21-ம் தேதி எனது கணவரையும் மகனையும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று இரவு எனது கணவர் ஜெயராஜ் இறந்துவிட்டார் என செய்தி வந்தது. இன்று காலை 8 மணிக்கு எனது மகன் பென்னிக்ஸ் இம்மானுவே இறந்துவிட்டான் என செய்தி வந்தது. எனது கணவரும் மகனும் சாத்தான்குளம் காவல்துறையினர் அடித்ததன் காரணமாகவே இறந்துள்ளார்கள். எனது கணவரையும் மகனையும் காட்டுமிராண்டி தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா, தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா மேலும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரணை செய்து நீதி, நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று செல்வராணி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment