Advertisment

சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம்; வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் அவரைப் பார்க்க வழக்கறிஞரைக்கூட அனுமதிப்பதில்லை என்றும் அதனால், சங்கர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம்; வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர், கடலூர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் அவரைப் பார்க்க வழக்கறிஞரைக்கூட அனுமதிப்பதில்லை என்றும் அதனால், சங்கர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சனங்களை தெரிவித்து வந்த சவுக்கு சங்கர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சவுக்கு சங்கரைப் பார்க்க யாரும் அனுமதிப்பதில்லை என்ற தகவல் வெளியான நிலையில், ஒரே மாத்தில் சவுக்கு சங்கரை 25 பேர் பார்த்துள்ளதால் 1 மாதத்துக்கு அவரை யாரும் சிறையில் சந்திக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சவுக்கு சங்கர், கடலூர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் அவரைப் பார்க்க வழக்கறிஞரைக்கூட அனுமதிப்பதில்லை என்றும் அதனால், சங்கர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் புகழேந்தி ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: சவுக்கு சங்கர் அரசுப் பணியில் இருந்து நீக்கிய உத்தரவை அவரிடம் அளிப்பதற்கு அவரிடம் சென்றுள்ளார்கள். அப்போது அதை அவர் வாங்க மறுத்திருக்கிறார். அதனால், அவர்கள் அவர் இருக்கிற அறையில் கொண்டுபோய் அரசு உத்தரவை ஒட்டியிருகிறார்கள். அப்படி ஒட்டும்போது அதை சவுக்கு சங்கர் கிழித்துப் போட்டார் என்பது சிறை அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. சங்கர் அதை கிழித்துப் போட்டார் என்பதற்காக அவருக்கு ஒரு மாத நேர்காணல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இதைக்கூட அவருக்கு தெரிவிக்கவில்லை.

தொடர்ச்சியாக அவரை வழக்கறிஞர்கள் சந்தித்துக்கொண்டு வரும்போது, என்னுடைய வழக்கறிஞர் ஏன் என்னைப் பார்க்க இவ்வளவு நாளாக வரவில்லை. நீங்கள் என்னுடைய வழக்கறிஞர் என்னை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கிறீர்களா என்று கேட்கும்போதுதான், சிறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள், நாங்கள் உங்களுக்கு ஒருமாத தண்டனை கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு சவுக்கு சங்கர், அப்படி என்றால் அதை எனக்கு எழுத்துப் பூர்வமாகக் கொடுங்கள் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள், இல்லை, இது வாய்மொழி உத்தரவு என்று கூறியிருக்கிறார்கள்.

அதனால், சவுக்கு சங்கர் என்ன செய்திருக்கிறார் என்றால், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது ஒரு மாத நேர்காணல் மற்றும் சிறை சலுகைகள் ரத்து செய்திருக்கிறார்கள். இப்படி ரத்து செய்தது சட்டப்படி தவறானது. அதனால், அதை எனக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையும், கடலூர் சிறையில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால், என்னை புழல் சிறைக்கு மாற்றுங்கள் என்று சவுக்கு சங்கர் கூறுகிறார்.

ஏனென்றால், சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு சென்றதில் இருந்து எச்.எஸ். பிளாக்கை மூடிவிட்டார்கள். இதனால், மற்ற சிறைவாசிகள்கூட சவுக்கு சங்கர் உடன் தொடர்புகொள்ள முடியாது. இவரும் தொடர்புகொள்ள முடியாது. தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போல எந்த சிறைவாசியையும் தனிமை சிறையில் அடைக்க சட்டத்தில் இடமில்லை. தொடர்ந்து, இந்த வழக்கில் சிறைச் சட்டத்தை மீறித்தான் செயல்படுகிறார்கள்.

சிறைத்துறையினர் சங்கர் வழக்கில் மட்டுமல்லாமல், வானளாவ அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் நீதிபதிகள் ராஜாவாக இருக்கலாம், முதலமைச்சர் ராஜாவாக இருக்கலாம். ஆனால், சிறைக்குள் நாங்கள்தான் ராஜா, நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற போக்கில் இருக்கிறார்கள்.

சிறையில் உள்ள ஒருவரை வழக்கறிஞர்கூட பார்க்க அனுமதிக்க முடியாது என்று எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டத்தில் சிறையில் உள்ள ஒரு கைதியை அவருடைய வழக்கறிஞரைப் பார்க்க அனுமதிக்க முடியாது என்று சிறை அதிகாரிகள் சொல்வதற்கு இடமே இல்லை. ஒரு வழக்கறிஞரைப் பார்க்க அனுமதி மறுப்பது என்பதே நீதிமன்ற அவமதிப்புதான்.

இவர்கள் இதுபோல, வேறு எந்த சிறைவாசிக்கும் கட்டுப்பாடுகள் விதித்தது இல்லை. இவருக்கு மட்டும் இதுபோல கட்டுப்பாடு விதிப்பதற்கு காரணம், அரசாங்கம் இவரை மிரட்டி மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்படுகிறது. அதுதான் வெளிப்படுகிறது. அதனால்தான், அவர் எனக்கு அங்கே பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்.

ஒரு வழக்கறிஞர் சவுக்கு சங்கரைப் பார்க்க மனு போட்டு அனுமதிக்கவில்லை என்பது மனு போட்ட பிறகுதான் தெரிந்தது. ஆனால், அவருக்கு எப்போது தெரிந்தது என்றால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரிந்தது.

அதனால், சிறையில் தனக்கு இழைக்கப்படும் கொடுமையை வெளியில் தெரியப்படுத்துவதற்கு ஒருவனுக்கு இருக்கும் ஒரே கடைசி ஆயுதம் அவனுடைய தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதுதான். அந்த செய்தி சிறைக்குள் பரவும், மற்ற இடங்களுக்கும் பரவும், மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தது சரி என்றால், சங்கர் உண்ணாவிரதம் இருப்பதும் சரிதான்.” என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment