நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்.பி.வருண் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு பிரச்சனை, மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் “ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிம் பேசுகிறேன், எங்கு போகிறேன், எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை’ என்று பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார். ’நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அவரது பொய்யான குற்றாச்சாட்டுகளுக்கு, எதிராக அவரை நீதிமன்றத்தில் சட்டத்தின் முன் நிற்க வைப்பேன். எனக்கு ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“