Advertisment

ஒரே மேடையில் அணிவகுத்த 234 தொகுதி வேட்பாளர்கள்; சீமான் திருவொற்றியூரில் போட்டி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அணிவகுக்கச் செய்து அறிமுகப்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
ஒரே மேடையில் அணிவகுத்த 234 தொகுதி வேட்பாளர்கள்; சீமான் திருவொற்றியூரில் போட்டி

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அணிவகுக்கச் செய்து அறிமுகப்படுத்தினார்.

Advertisment

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தலையிலான ஒரு கூட்டணியும் எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியும் அதோடு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆணும் பெண்ணும் சமம் என்பதால், இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்திருந்தார். இந்த 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், தான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

publive-image

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் பட்டியல்

1. திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி - உ.உஷா

2.திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி (தனி) - அ.மகேஷ்வரி

3.திருவள்ளூர் மாவட்டம் - திருத்தணி - லி.அகிலா

4.திருவள்ளூர் மாவட்டம் - திருவள்ளூர் - பெ.பசுபதி

5.திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி (தனி) - வி.மணிமேகலை

6.திருவள்ளூர் - ஆவடி - கோ.விஜயலட்சுமி

7.சென்னை - மதுரவாயல் - கோ.கணேஷ்குமார்

8.திருவள்ளூர் மாவட்டம் - அப்பத்தூர் - இரா.அன்புத்தென்னரசன்

9.சென்னை - மாதவரம் - இரா.ஏழுமலை

10.சென்னை - திருவொற்றியூர் - சீமான்

11.சென்னை - ராதாகிருஷ்ணன் நகர் - கு.கௌரிசங்கர்

12.சென்னை - பெரம்பூர் - செ.மெர்லின் சுகந்தி

13.சென்னை - கொளத்தூர் - பெ.கெமில்ஸ் செல்வா

14.சென்னை - வில்லிவாக்கம் - இரா.ஸ்ரீதர்

15.சென்னை - திருவிக நகர் (தனி) - இரா.இளவஞ்சி

16.சென்னை - எழும்பூர் - (தனி) - பூ.கீதாலட்சுமி

17.சென்னை - ராயபுரம் - சு.கமலி

18.சென்னை - துறைமுகம் - சே.ப.முகம்மது கதாபி

19.சென்னை - சேப்பாக்கம் - மு.ஜெயசிம்மராஜா

20.சென்னை - ஆயிரம் விளக்கு - அ.ஜெ.ஷெரின்

21.சென்னை - அண்ணாநகர் - சி.சங்கர்

22.சென்னை - விருகம்பாக்கம் - த.சா.ராசேந்திரன்

23.சென்னை - சைதாப்பேட்டை - பா.சுரேஷ்குமார்

24.சென்னை - தியாகராயநகர் - பா.சிவசங்கரி

25.சென்னை - மயிலாப்பூர் - கி.மகாலட்சுமி

27.சென்னை - வேளச்சேரி - மோ.கீர்த்தனா

28.சென்னை - சோழிங்கநல்லூர் - ச.மைக்கேல் வின்செண்ட் சேவியர்

29.சென்னை - ஆலந்தூர் - இரா.கார்த்திகேயன்

30.காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் (தனி) - த.புஷ்பராஜ்

31.செங்கல்பட்டு - பல்லாவரம் - க.மினிஸ்ரீ

32.செங்கல்பட்டு - செங்கல்பட்டு - கி.சஞ்சீவிநாதன்

33.செங்கல்பட்டு மாவட்டம் - திருப்போரூர் - ச.மோகனசுந்தரி

34.செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர் (தனி) - இரா.இராஜேஷ்

35.செங்கல்பட்டு மாவட்டம் - மதுராந்தகம் (தனி) - வெ.சுமிதா

36.காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் - சீ.காமாட்சி

37.காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் - சா.சால்டின்

38.இராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம் (தனி) - எ.அபிராமி

39.இராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர் - யு.ரா.பாவேந்தன்

40இராணிப்பேட்டை மாவட்டம் - காட்பாடி - ச.திருக்குமரன்

41.இராணிப்பேட்டை மாவட்டம் - இராணிப்பேட்டை - வெ.சைலஜா

42.இராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு - இரா.கதிரவன்

43.வேலூர் மாவட்டம் - வேலூர் - நா.பூங்குன்றன்

44.வேலூர் மாவட்டம் - அனைக்கட்டு - அ.சுமித்ரா

45.வேலூர் மாவட்டம் - கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) - ஜெ.திவ்யராணி

46.வேலூர் மாவட்டம் - குடியாத்தம் (தனி) - இரா.கலையேந்திரி

47.திருப்பத்தூர் மாவட்டம் - வாணியம்பாடி - சா.தேவேந்திரன்

48.திருப்பத்தூர் மாவட்டம் - ஆம்பூர் - மா.மெகருனிஷ

49.திருப்பத்தூர் மாவட்டம் - ஜோலார்பேட்டை - ஆ.சிவா

50.திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் - மா.சுமதி

51.கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை (தனி) - க.இளங்கோவன்

52.கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர் - க.கருணாகரன்

53.கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி - வ.நிரந்தரி

54.கிருஷ்ணகிரி மாவட்டம் - வேப்பனஹள்ளி - மு.சக்திவேல்

55.கிருஷ்ணகிரி மாவட்டம் - ஒசூர் - அ.கீதாலட்சுமி

56.கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி - இரா.மேரி செல்வராணி

57.தர்மபுரி மாவட்டம் - பாலக்கோடு - க.கலைச்செல்வி

58.தர்மபுரி மாவட்டம் - பென்னாகரம் - இரா.தமிழழகன்

59.தர்மபுரி மாவட்டம் - தர்மபுரி - அ.செந்தில் குமார்

60.தர்மபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி - இரா.ரமேஷ்

61.தர்மபுரி மாவட்டம் - அரூர் (தனி) - க.கீர்த்தனா

62.திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் (தனி) - சீ.வெண்ணிலா

63.திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை - ஜெ.கமலக்கண்ணன்

64.திருவண்ணாமலை மாவட்டம் - கீழ்பெண்ணாத்தூர் - இரா.ரமேஷ்பாபு

65.திருவண்ணாமலை மாவட்டம் - கலசப்பாக்கம் - ஏ.பாலாஜி

66.திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் - அ.லாவன்யா

67.திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி - இரா.பிரகலதா

68.திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாறு - கோ.பீமன்

69.திருவண்ணாமலை மாவட்டம் - வந்தவாசி (தனி) - க.பிரபாவதி

70.விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி - அ.பூ.சுகுமார்

71.விழுப்புரம் மாவட்டம் - மயிலம் - லோ.உமாமகேஸ்வரி

72.விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் (தனி) - பா.பேச்சிமுத்து

73.விழுப்புரம் மாவட்டம் - வானூர் (தனி) - மு.லட்சுமி

74.விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் - ஜெ.செல்வம்

75.விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி - ஜெ.ஷீபா ஆஸ்மீ

76.கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர் - சி.முருகன்

77.கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை - லூ.புஷ்பமேரி

78.கள்ளக்குறிச்சி மாவட்டம் - இரிஷிவந்தியம் - இர.சுரேஷ் மணிவண்ணன்

79.கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம் - சு.ரஜியாமா

80.கள்ளக்குறிச்சி மாவட்டம் - கள்ளக்குறிச்சி - (தனி) - தி.திராவிடமுத்தமிழ்ச்செல்வி

81.சேலம் - கங்கவல்லி (தனி) - இரா.வினோதினி

82.சேலம் மாவட்டம் - ஆத்தூர் (தனி) - ச.கிருஷ்ணவேணி

83.சேலம் மாவட்டம் - ஏற்காடு (தனி) (எஸ்.டி) - ஸ்ரீ.ஜோதி

84.சேலம் மாவட்டம் - ஓமலூர் - அ.இராசா

85.சேலம் மாவட்டம் - மேட்டூர் சி.மணிகண்டன்

86.சேலம் மாவட்டம் - எடப்பாடி - அ.ஸ்ரீ ரத்னா

87.சேலம் மாவட்டம் - சங்ககிரி - அ.அனிதா

88.சேலம் மாவட்டம் - சேலம் - மேற்கு - தே.நாகம்மாள்

89.சேலம் மாவட்டம் - சேலம் - வடக்கு - ந.இமயைஈஸ்வரன்

90.சேலம் மாவட்டம் - சேலம் - தெற்கு - ச.மாரியம்மா

91.சேலம் மாவட்டம் - வீராபாண்டி - செ.ராஜேஷ் குமார்

92.நாமக்கல் மாவட்டம் - இராசிபுரம் (தனி) - கா.சிலம்பரசி

93.நாமக்கல் மாவட்டம் - சேந்தமங்கலம் (தனி) (எஸ்.டி) - த.ரோகிணி

94.நாமக்கல் மாவட்டம் - நாமக்கல் - பா.பாஸ்கர்

95.நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் - சு.யுவராணி

96.நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு - பொ.நடராசன்

97.நாமக்கல் மாவட்டம் - குமாராபாளையம் - சு.வருண்

98.ஈரோடு மாவட்டம் - ஈரோடு கிழக்கு - ச.கோமதி

99.ஈரோடு மாவட்டம் - ஈரோடு மேற்கு - ப.சந்திரகுமார்

100.ஈரோடு மாவட்டம் - மொடக்குறிச்சி - கோ.லோகுபிரகாசு

234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தபின் பேசிய சீமான், “ஆதி மனிதனும் தமிழன்தான், ஆதி மொழியும் தமிழ்தான்; தமிழ் எங்கள் முகவரி; தமிழ் எங்கள் தாய், தமிழ் எங்கள் அடையாளம், நாங்கள் உறுதியாக வெல்வோம். வேளாண் தொழிலை செய்ய படித்தவர்கள் முன்வரவேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண்மை அரசுப் பணியாக மாற்றப்படும். தமிழ் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் கட்டாய பாடமொழி, உலகின் எம்மொழியும் எங்கள் விருப்ப மொழி” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமா, “அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Assembly Elections 2021 Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment