சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு! தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு

சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் 2 நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளார்.

சிலை கடத்தல், பழமைவாய்ந்த கோவில் பொருட்கள், கலாச்சார பொருள்கள் மாயமானது, திருடபட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரிக்கும் உயர்நீதிமன்றம் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துஆர்.

அருப்புக்கோட்டை அருகே, சிலை கடத்தல் வழக்கை விசாரித்த காவல்துறையே பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகளை கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, யானை ராஜேந்திரன், ஸ்ரீரஙகத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நம்பி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழகத்தில் கோவில் சிலை திருட்டு, கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக 21 வழிமுறைகளை வகுத்து, அதை செயல்படுத்தும்படி தமிழக அரசுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தவும், அவருக்கு தேவையான காவலர்கள் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள சிலைகள் மயாமனது தொடர்பாகவும், அங்குள்ள கோபுரங்களில் உள்ள சிலைகள் காணாமல் போவதாகவும், கதவுகளில் உள்ள புராதான பொருகள்கள் மயமாகி உள்ளது இது குறித்து காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என திருச்சியை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் ரங்கராஜ நரசிம்மன், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சிலைகள் மயமாகி வருவதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 12 ஆம் தேதிவரை 3 நாட்கள் கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அப்போது தான் சிலைகள் காணாமல் போனதாக தெரிகின்றது. இது தொடர்பான விபரங்களும் அச்சகர்களுக்கும் தெரியவில்லை. எனவே விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி மகாதேவன், கோவில் சிலை கடத்தல், மாயமானது, பழமைவாய்ந்த கோவில் பொருட்கள் மாயமான சம்பவங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

அந்த அமர்வில் நானும் (நீதிபதி ஆர். மகாதேவன்) நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அந்த அமர்வு வழக்குகளை விசாரிக்கும் என்றார். இந்த வழக்கானது கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இந்த வழக்கையும் அந்த அமர்வே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஜூலை 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஆர். மகாதேவன் தெரிவித்துள்ளார் .

இதனையடுத்து வழக்கு விசாரணை தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close