‘என் மகளை விட்டுடுங்க’ – தற்கொலை முயற்சிக்கு முன் நடிகை ஜெயஸ்ரீ கடிதம்

டிவி சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் நண்பர்களால் மீட்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: January 17, 2020, 12:36:39 PM

டிவி சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் நண்பர்களால் மீட்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஜெயஸ்ரீ, வம்சம், தேவதை, இளவரசி, பாவ மன்னிப்பு உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். டிவி சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் உள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீ திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில், தனது 8 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகையில், ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் ஈஸ்வர் ரகுநாத் ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.

ஈஸ்வர் ரகுநாத்தும் ஜெயஸ்ரீயும் திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர், “ஈஸ்வர் ரகுநாத் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என்றும் தன்னை தாக்கப்பட்டதாகவும் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்வர் – ஜெயஸ்ரீ பிரச்னையில், ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது, ஈஸ்வர் ஜெயஸ்ரீயை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஈஸ்வர் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஈஸ்வர் மற்றும் அவருடைய தாயார் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ புதன்கிழமை கூடுவாஞ்சேரியில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றார். அங்கேஎ ஜெயஸ்ரீ உடல்நலம் சரியில்லை என்று கூற, நண்பர்கள் அவரை வீட்டுக்குச் செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், அவர் வீட்டுக்குச் செல்லாமல் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று அங்கு தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

இதனிடையே, விடுதி அறைக்குத் திரும்பிய நண்பர்கள், ஜெயஸ்ரீ தூக்கமாத்திரை விழுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், அவர் அங்கிருந்து நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயஸ்ரீயின் தற்கொலை முயற்சி குறித்து அவருடைய தாயார் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் அளித்துள்ளார்.

ஜெயஸ்ரீ தூக்கமாத்திரை விழுங்குவதர்கு முன்பு, தனது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தனது ஹேன் பேக்கில் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதோடு, ஜெயஸ்ரீ தனது நண்பர்களுக்கு ஆடியோ பதிவையும் அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ள ஜெயஸ்ரீ, “ஹாய் ரேஷ். எனக்கு என்னன்னு தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நான் பயனற்றவளாக உணர்கிறேன் ரேஷ். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் கொடுத்தாய் நீ.

என் அக்கா என்னிடம் எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்குப் பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா. முடிஞ்சா அம்மாவைப் பார்த்துக்க. இது குட்பை மெசேஜ் பை” என்று தனது தோழிக்கு ஆடியோ மேசேஜ் அனுப்பியுள்ளார்.

மேலும், ஜெயஸ்ரீயின் தற்கொலை முயற்சிக்கான கடிதத்தில், மிகவும் உருக்கமாக, கணவர் ஈஸ்வர் ஏமாற்றியதை
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்கள் அடுத்த இலக்கு மகள் ரேத்வாதானா என்று ஈஸ்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் ஜெயஸ்ரீ எழுதியிருப்பதாவது, “ஈஸ்வர், நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞரின் துணையுடன் எனக்கு இத்தனை துன்பங்களை கொடுத்தீர்கள்.

எனக்கும், எனது மகளுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்கள் என ஒரு போதும் நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை உண்மையாக விரும்பினீர்கள் என நினைத்தேன். ஆனால் பொய்யான நம்பிக்கைகளை எங்களுக்கு ஏன் அளித்தீர்கள் ஈஸ்வர்?

நீங்கள் தான் 2013-ஆம் ஆண்டு என்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள். எனது வாழ்வில் துணையாக இருந்தீர்கள். என் மகள் அப்பா என அழைக்கும்படி அவளை பார்த்துக் கொண்டீர்கள். ஈஸ்வர் இது போல என் வாழ்வில் மாற்றம் வரும் என ஒரு போதும் நான் நினைத்ததில்லை.

ஈஸ்வர் நாம் ஒன்றாக வாழ்ந்த காலங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை பற்றி மட்டுமே நினைத்தீர்கள். என்னையும் என் குழந்தையையும் பற்றி ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. என்னை ஆள் வைத்து கொல்லும் நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கடவுளே ஈஸ்வர் இப்படி செய்வார் என என்னால் நம்பமுடியவில்லை.

இன்று நான் உங்களுக்கு மதிப்பு இல்லாதவளாகிவிட்டேன். பால், மளிகை பொருட்கள், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். ஆனால், நீங்கள் சூதாடியதால் ஏற்பட்ட லட்சக்கணக்கான கடனை நான்தான் அடைத்தேன்.

இந்த வீட்டை ரூ.2 கோடிக்கு நான்தான் வாங்கினேன். அதுமட்டுமில்லாமல், ஈஸ்வர் உங்கள் தினசரி செலவிற்கும் நான்தான் பணம் கொடுத்துள்ளேன். ஆனால், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள். எனக்கும் எனது மகளுக்கும் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய உங்களுக்கு மனமில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான கடனை கூட என்னால் திருப்பித் தர முடியாத நிலையில் இருக்கிறேன்.

எனக்கு இப்போது வேலைக்கான வாய்ப்புகள் இல்லாததால் என்னால் இவற்றை திருப்பி செலுத்த முடியாது என்பது உங்களுக்கும் நன்றாக தெரியும்.

ஈஸ்வர் நீங்கள் என்னை ஏமாற்றவே மாட்டேன் என எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஈஎம்ஐயை செலுத்தாததிலிருந்து எல்லா பிரச்னையும் தொடங்கிவிட்டது. என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினீர்கள். இதுதான் நீங்கள் செய்யும் கைமாறா ஈஸ்வர்? இப்படித்தான் ஒரு மனைவியையும் மகளையும் ஏமாற்றுவதா ஈஸ்வர்?

ஈஸ்வர் நீங்கள் இதயமே இல்லாமல் தந்திரமாக செயல்பட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்களுடைய அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா என எனக்கு தெரியவில்லை. ஈஸ்வர் உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். அவள் என் அம்மாவிடம் நிம்மதியாக வாழட்டும். உங்களுக்கு என் உயிர் தானே வேண்டும். எடுத்துக் கொள்ளுங்கள். என் மகளை விட்டுவிடுங்கள்” இவ்வாறு ஜெயஸ்ரீ தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயஸ்ரீயி தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து, அவருடையா தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Serial actress jayashree suicide attempts admitted in hospital she wrote letter to husband

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X