இளம் பெண் கற்பழிப்பு வழக்கில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பியின் மகனும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான அசேன் மெளலானா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறையினரிடம் உள்ள ஆதாரத்தை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதியின் முன்னாள் எம்.பியாக இருந்தவர் ஜே.எம் ஆரூண். இவர் மகன் அசன். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். இவர் மீது பார்வதி பர்வீன் பாத்திமா என்ற பெண் சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையித்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அளித்த புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அசன் பல சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலியல் உறவு வைத்து கொண்டார். மேலும் திருமணம் செய்யமலும் ஏமற்றியுள்ளார் என புகார் அளித்துள்ளார் . அந்த புகாரின் அடிப்படையில் அசன் மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு, பெண்களை துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது.
இந்த புகாரில் காவல்துறை தன்னை கைது செய்ய கூடும் என அஞ்சிய அசன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீசஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் அசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கபட்டுள்ளதாகவும் இந்த புகார் திட்டமிட்டு அரசியல் ரீதியாக பலி வாங்க அளித்த புகார். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அப்போது புகார்தாரர் பர்வீன் பாத்திமா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘அசன் மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி முன் ஜாமீன் தொடர்பாக காவல்துறை பதில் அளிக்கவும் வழக்கில் உள்ள ஆவணங்கள (CD File) வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதே போல் புகார் அளித்த பர்வீன் பாத்திமா தன்னுடன் உள்ள ஆதாரங்களையும் வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை திங்கள்கிழமை தள்ளிவைத்தார்.