2018-ம் ஆண்டு நடைபெறும் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

2018-ம் ஆண்டுக்கான 10, 11, 12 ம் வகுப்புகளூக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான தேர்வு கால அட்டவணையும் வெளி்யிடப்பட்டுள்ளன.

2018-ம் நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி நிறைவடையும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.5.2018 அன்று வெளியிடப்படும்.

பிளஸ் -1 பொதுத்தேர்வானது மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும். பிளஸ் -1 தேர்வு முடிவுகள் 30.5.2018 அன்று வெளியாகும்.

இதேபோல, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 16.05.18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close