Advertisment

`நீதிக்கதை' பேச்சிமுத்து என்கிற ஓபிஎஸ்.. வைரலாகும் குறும்படம்!

author-image
WebDesk
New Update
பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓபிஎஸ் ஆலோசனை: அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற ரேஸ் தொடங்கி பெரிய விவாதமாக மாறி வருகிறது. நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்தது எனக் கூறப்பட்டது. இன்று காலை ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் முத்து என்கிற ஒரு சிறுவன் மூலமாக சொல்லப்படும் நீதி கதை தொடர்பான குறும்படம் வைரலாகி வருகிறது.

சிறுவன் முத்து என்கிற பேச்சிமுத்துவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் மூலமாக நீதிக்கத்தை சொல்லப்படுகிறது. இந்த குறும்படத்தில் ஹைலைட் கிளைமேக்ஸ் தான். பக்கத்து வீட்டு பெண்மணிக்கு `அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்' என்கிற நீதியை சிறுவயதில் இருக்கும் முத்து கற்றுத் தருகிறார். அதைப் பார்த்து பெருமிதப்படுகிறார் பக்கத்து வீட்டு பெண்மணி. கிளைமேக்ஸில், இந்த முத்து என்ற பேச்சிமுத்துதான்... நம்ம ஐயா ஓபிஎஸ். இப்படிதான் தன்னுடைய சின்ன வயதிலேயே இப்படியான நீதிக்கதைகளை ரகசியமாக நண்பர்களிடம் சொல்லி செயல்படுத்துபவர் ஓபிஎஸ் என்றும், அவரின் நிர்வாகத் திறன் குறித்தும் பேசுகிறார்கள் அந்த வீடியோவில். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Aiadmk Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment