ரஜினியின் தீவிர ரசிகர்.. சித்த மருத்துவர் வீரபாபு-வின் உழைப்பாளி மருத்துவமனை! ரூ. 10 க்கு சிகிச்சை!

பத்து ரூபாய்க்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதால் சமூக வலைதளங்களில் வீரபாபுவின் முயற்சிக்கு பாராட்டு

By: Updated: September 18, 2020, 10:54:04 AM

siddha doctor veerababu corona siddha doctor veerababu : கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு, ரூ.10 கட்டணத்தில் ’உழைப்பாளி மருத்துவமனையை நேற்று (18.9.20) திறந்தார். இவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். வெறும் 10.ரூபாய்க்கு சிகிச்சை செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தம் சித்த மருத்துவத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு மேல் சிறப்பாக சிகிச்சை அளித்து எந்த வித உயிரிழப்பும் இல்லாமல் குணப்படுத்தி வந்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு தற்போது அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் இருந்து விலகி உள்ளார். 2016 ,17 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வந்த நிலையில் அதற்கு நிலவேம்பு கசாயம் தீர்வாகும் என்று பிரபலப்படுத்தியவர் சித்த மருத்துவர் வீரபாபு. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க, சாலிகிராமத்தில் இவருக்கு தனி சித்த மருத்துவ மையத்தை வழங்கியது சென்னை மாநகராட்சி.

இந்நிலையில் மருத்துவம் அளிக்கும் பணியில் இருந்து விலகுவதாக சித்த மருத்துவர் வீரபாபு அறிவித்திருந்தார். மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்த பின்னர் பணியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்று ரூ.10 கட்டணத்தில் புதிய மருத்துவமனையை துவக்க வீரபாபு திட்டமிட்டிருந்தார். அதற்காக மருத்துவமனையை வடிவமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.இந்த மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது.

ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்பட உள்ள மருத்துவமனையில் சித்த மருத்துவத்துடன், அலோபதி சிகிச்சையும் அதே கட்டணத்துக்கு வழங்கப்பட உள்ளது.பத்து ரூபாய்க்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படும் என்பதால் சமூக வலைதளங்களில் வீரபாபுவின் முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மருத்துவர் வீரபாபு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தம்முடைய உணவகங்கள் மற்றும் மருத்துவமனையின் பெயரில் ரஜினியின் திரைப்படத்தை குறிக்கும் வகையில் உழைப்பாளி என்றும் ரஜினியின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Siddha doctor veerababu corona siddha doctor veerababu uzhaippali hospital in vadapalani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X