நூல் தேர்வு முதல் வீட்டு விஷேசம் வரை : சிறுமுகைப் பட்டு சிறப்பு புகைப்பட தொகுப்பு!

நெசவாளர்களின் வாழ்வானது மங்கி வருகிறது என்ற தோற்றப் போலியை அடித்து நொறுக்குகிறது சிறுமுகை பட்டும் அதன் வளர்ச்சியும்!

By: Updated: June 24, 2020, 03:39:37 PM

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery : உங்களுக்கு தெரியுமா, ஒரு கைத்தறி புடவை உற்பத்தியாளரின் ஆரம்பித்து வாடிக்கையாளரின் கையில் வந்து சேர்வதற்கு 1318 நபர்களின் உழைப்பு தேவைப்படும் என்று? கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சிறுமுகை பட்டு நெசவு குறித்த ஒரு சிறப்பு புகைப்படத் தொகுப்பு.

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது சிறுமுகை. கோரப்பட்டிற்கும், மென்பட்டிற்கும் பெயர் போன பகுதி இது. Express Photo by Nithya Pandian

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery மாதத்திற்கு தோராயமாக ரூ. 50 கோடி பணப்புழக்கம் கொண்ட இந்த பகுதியில் நெய்யப்படும் கைத்தறி பட்டு மற்றும் காட்டன் புடவைகளுக்கு கோவை மற்றும் இதர கொங்கு பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. பருத்தி நூலின் தரத்தை சோதனையிடும் நெசவளார் (Express Photo by Nithya Pandian)

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery பட்டு நூலின் தேவைக்கு முழுமையாக சீனாவையே நம்பியுள்ளது சிறுமுகை. இங்கு நெய்யப்படும் ஒரு பட்டுப் புடவையின் எடை 600 கிராம் ஆகும். பட்டுப்புடவையை நெய்யும் நெசவாளர் (Express Photo by Nithya Pandian) Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery காஞ்சிப் பட்டினை போன்று பசை போட்டு நெய்வதற்கு பதிலாக இங்கு நீர் கொண்டு நெய்கிறார்கள். Express Photo by Nithya Pandian

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery மாதம் ஒன்றுக்கு ஒரு நெசவாளி 15 முதல் 20 புடவைகளை நெய்கிறார். காஞ்சிபுரத்தில் தேவைப்படும் பட்டைக் காட்டிலும் இங்கு இரண்டு மடங்கு கூடுதலாக பட்டு தேவைப்படுகிறது. Express Photo by Nithya Pandian

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery தறியின் அமைப்பும் வ்ராப் மற்றும் வெஃப்ட் பகுதிகள் (Express Photo by Nithya Pandian)

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery பட்டுப்புடவைக்கு போடப்படும் டிசைனை செய்வதற்காக ஜக்கார்ட் கார்ட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். தறிக்குழியின் பக்கவாட்டு பகுதியும் நெசவு செய்யப்படும் சேலையின் காட்சியும் (Express Photo by Nithya)

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery ஒரு நெசவாளி இரண்டு நாட்களுக்குள் ஒரு பட்டுப்புடவையை நெய்துவிடுவார். மிக குறைந்தபட்சமாக இங்கு ஒருவரால் ரூ. 500க்கும் பட்டுப்புடவை வாங்க இயலும். அதிகபட்சமாக, முகூர்த்தத்திற்காக ரூ. 50 ஆயிரம் வரை பட்டுப்புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள் பொதுமக்கள். Express Photo by Nithya Pandian

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery தறியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை கவனித்துக் கொள்ள தனியாக ஆசாரிகள் இப்பகுதியில் உள்ளனர். Express Photo by Nithya

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery இப்பகுதியில் நெசவு மற்றும் அதன்சார் தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.

 

Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery கைத்தறி நெசவு குறித்தும், நெசவாளர்கள் குறித்தும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பேசியும், நெசவாளர்களின் இன்றைய நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் காரப்பன் சில்கஸ் உரிமையாளர் காரப்பன்.

மேலும் படிக்க : கைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sirumugai hand loom sarees from the hand spun to handwoven special photo gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X