Advertisment

ஜூலை 21-ல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணி மண்டபம் திறப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அவரது நினைவு நாளான வருகிற ஜூலை 21-ம் தேதி திறக்கப்படவுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜூலை 21-ல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணி மண்டபம் திறப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அவரது நினைவு நாளான வருகிற ஜூலை மாதம் 21-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளது.

Advertisment

கலைத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் முத்திரை பதித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார். அதனையடுத்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்ற தமிழக அரசு, சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே, கடந்த 2006-ஆம் முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தார்.

இதனையடுது, மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, "தமிழக அரசே மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்" என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மணி மண்டபம் கட்டும் பணி பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. இது கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் சிவாஜி கணேசன் சிலையை அமைப்பதற்கான பீடம் கட்டப்பட்டு இருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, அகற்றப்பட்டு இந்த பீடத்தில் வைக்கப்படவுள்ளது.

திராவிட கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறு சிறு கோபுரங்கள் வடிவில் கட்டிட கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் வசதிக்காக மணிமண்டபத்தின் உள்ளே குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் சிவாஜியை நினைவுபடுத்தும் வகையில் அவரது அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளது.

மணி மண்டபத்தில் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அவரது நினைவு நாளான வருகிற ஜூலை மாதம் 21-ம் தேதியன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார். மேலும், திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment