மாட்டிறைச்சி விவகாரம்: சட்ட விரோத செயலை அடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை : தெகலான் பாகவி

நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் தலித்கள், விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், தனிப்பட்ட அமைப்புகளை சார்ந்தவர்களின் இத்தகைய சட்ட விரோத செயலை அடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இறைச்சிக்காக மாடுகளை விற்ககக் கூடாது என்ற மத்திய அரசின் தடை உத்தரவு நாடு முழுவதும் பதட்டத்தையும், வன்முறையும் உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே பசு காவலர்கள் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபட்டுவந்த வன்முறை குண்டர்களுக்கும், மாட்டின் பெயரால் வியாபாரிகளிடம், விவசாயிகளிடம் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களுக்கும் இந்த தடை உத்தரவு மேலும் ஊக்கத்தையும், தைரியத்தையும் உருவாக்கியிருக்கிறது.

அதனுடைய விளைவு நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் தலித்கள், விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், தனிப்பட்ட அமைப்புகளை சார்ந்தவர்களின் இத்தகைய சட்ட விரோத செயலை அடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே காவல்துறை தனது போக்கை சரிசெய்து கொண்டு துரிதமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது, அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது போன்ற உரிமை மீறல்களை உடனடியாக காவல்துறை கைவிட்டுவிட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்புகளை சேர்ந்தவர்களின் சட்டவிரோத செயலை அடக்குவதற்கு, தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை முனைய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close