Advertisment

புதிய ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் தமிழத்தின் 4 நகரங்கள்... திருச்சி, திருநெல்வேலிக்கு இடம்!

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Venkaiah Naidu

புதிதாக 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தின் 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

Advertisment

கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரை 3 கட்டங்களாக 60 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டடுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் 30 புதிய ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது.

அதில் குறிப்பிடும்படியாக, தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

புதிய 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல்

  1. கேரள மாநிலம் - திருவனந்தபுரம்
  2. சத்தீஸ்கர் மாநிலம் - நயா ராய்பூர்
  3. குஜராத் மாநிலம் - ராஜ்கோட்
  4. ஆந்திர மாநிலம் - அமராவதி
  5. பிஹார் மாநிலம்- பாட்னா
  6. தெலங்கானா மாநிலம் - கரீம்நகர்
  7. பிஹார் மாநிலம்- முசாபர் நகர்
  8. புதுச்சேரி - புதுச்சேரி
  9. குஜராத் மாநிலம் - காந்திநகர்
  10. ஜம்மு - காஷ்மீர் - ஸ்ரீநகர்
  11. மத்தியப் பிரதேச மாநிலம் - சாகர்
  12. ஹரியானா மாநிலம் - கர்னால்
  13. மத்தியப்பிரதேச மாநிலம் - சட்னா
  14. கர்நாடக மாநிலம் - பெங்களூரு
  15. ஹிமாச்சலப் பிரதேசம் - சிம்லா
  16. உத்தராகாண்ட் மாநிலம் - டேராடூன்
  17. தமிழ்நாடு - திருநெல்வேலி
  18. தமிழ்நாடு - திருப்பூர்
  19. தமிழ்நாடு - திருச்சிராப்பள்ளி
  20. மகாராஷ்டிரா மாநிலம் -சின்ச்வாட்
  21. மகாராஷ்டிரா மாநிலம் - பிம்ப்ரி
  22. சட்டீஸ்கர் - பிலாஸ்பூர்
  23. அருணாச்சலப் பிரதேச மாநிலம் - பாசிகட்
  24. ஜம்மு காஷ்மீர் மாநிலம் - ஜம்மு
  25. குஜராத் மாநிலம் - தாஹோத்
  26. உத்தரப்பிரதேச மாநிலம்-ஜான்சி
  27. மிசோரம் மாநிலம் - அய்ஸ்வால்
  28. உத்திரபிரதேச மாநிலம் - அலகாபாத்
  29. உத்திரபிரதேச மாநிலம் - அலிகார்
  30. சிக்கிம் மாநிலம் - கேங்டோக்
Tiruchirappalli Tirunelveli Thoothukudi Tiruppur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment