Advertisment

தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு… முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முக்கியமான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு…  முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டன.

Advertisment

அப்போது, பாதுகாப்பு காரணத்திற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இது உடனடியாக வெளியூர் செல்லும் நபர்களுக்கு சிரமமாக இருந்துவந்தது.

தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், முன்பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதன்படி, சுமார் 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 11 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முக்கியமான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்குப்படும் ரயில்களின் விவரம்

  • மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729), புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
  • அதே போல், சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12635), மதுரை-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12636) வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16191), நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16192) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் டூ கோயம்பத்தூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12679), கோயம்பத்தூர் டூ சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் எண் 12680 இன்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • திருநெல்வேலி டூ பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் எண் 16791 மற்றும் பாலக்காடு டூ திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ரயில் எண் 16792, பலரூவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும்,
  • மங்களூரு சென்ட்ரல் டூ நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் 16649 மற்றும் நாகர்கோவில் டூ மங்களூரு சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் எண் 16650 ஆகியவற்றில், 4 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment