Advertisment

தீபாவளி சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு எப்போது ?

சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா், நாகா்கோவில், எா்ணாகுளம்  உட்பட பல்வேறு இடங்களுக்கு எட்டு  சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
southern railway to run 8 special trains tamilnadu

southern railway to run 8 special trains tamilnadu

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருகளுக்கு செல்வது வழக்கம். இந்த பயண நெரிசலை சமாளிக்க 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

Advertisment

மோடி - ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ?

இதன் தொடர்ச்சியாக, தெற்கு ரயில்வேயும் சில முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா், நாகா்கோவில், எா்ணாகுளம்  உட்பட பல்வேறு இடங்களுக்கு எட்டு  சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களுக்குள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்னதாகவே ( ஜூன் 26 முதல் ) ரயில்வே முன்பதிவு வசதியை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களில் எல்லா டிக்கெட்களும் விற்கப்பட்டன. மேலும், வெய்டிங் லிஸ்ட் பட்டியலும் அதிகமான மக்கள் இடம் பெற்றுள்ளனர். இதை மனதில் வைத்துக் கொண்டு தான், தமிழகத்தில் மட்டும் மேலும் எட்டு சிறப்பு  ரயில்களை  இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.  முன்பதிவு செய்ய முடியாத மக்களுக்கும், கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்யப் போகும் மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment