Southwest Monsoon 2019 Chennai Weather Mumbai Flood : இன்றைய வானிலை : தமிழகத்தில் பருவமழை இந்த மாதம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கோவை, நீலகிரி, மற்றும் தேனி மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை : சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக கூடும்.
மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக 19 நபர்கள் இதுவரை உயிரிழந்தனர்.
இந்த கனமழை இன்றும் நாளையும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மேல் நோக்கி நகர்ந்து வருவதால் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் வரை இவ்வாரத்தில் இருந்து பருவமழை துவங்குகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Southwest monsoon 2019 chennai weather mumbai flood latest weather updates
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை