Advertisment

மும்பையை வெளுத்து வாங்கும் கனமழை... வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் பருவமழை...

ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கிய நிலையில் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மும்பையை வெளுத்து வாங்கும் கனமழை... வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் பருவமழை...

tamilnadu chennai weather live updates :

Southwest Monsoon 2019 Chennai Weather Mumbai Flood :  இன்றைய வானிலை : தமிழகத்தில் பருவமழை இந்த மாதம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கோவை, நீலகிரி, மற்றும் தேனி மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சென்னை வானிலை : சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக கூடும்.

Mumbai Rains

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக 19 நபர்கள் இதுவரை உயிரிழந்தனர்.

இந்த கனமழை இன்றும் நாளையும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.  தென்மேற்கு பருவமழை மேல் நோக்கி நகர்ந்து வருவதால் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் வரை இவ்வாரத்தில் இருந்து பருவமழை துவங்குகிறது.

மேலும் படிக்க : 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக பெய்த பருவமழை… அதிர்ச்சி தரும் ஜூன் மாத ரிப்போர்ட்!

Chennai Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment