Advertisment

டெண்டர் முறைகேடு… முந்தைய அரசு கைவிட்ட வழக்கை இந்த அரசு தொடர முடியாது: எஸ்.பி வேலுமணி வாதம்

மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முந்தைய அதிமுக அரசு கைவிட்டுவிட்டது. அதனால், திமுக அரசு வேறு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என்று ஐகோர்ட்டில் எஸ்.பி. வேலுமணி தரப்பு வாதம்.

author-image
WebDesk
New Update
SP Velumani, aiadmk, admk, admk govt, corporation contracts irregularities case, chennai high court, அதிமுக, எஸ்பி வேலுமணி, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு, அறப்போர் இயக்கம், திமுக, ஆர் எஸ் பாரதி, dmk, dmk govt, rs bharathi, arappor iyakkam

மாநகராட்சி ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முந்தைய அதிமுக அரசு கைவிட்டுவிட்டது. அதனால், இந்த வழக்கில் திமுக அரசு வேறு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என்று எஸ்.பி. வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாதிட்டார்.

Advertisment

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியதாவது: “அரப்போர் இயக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வழங்கிய டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் அது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தக் கோரி 2018ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் என்று கூறினார்.

2019ம் ஆண்டில் இந்த மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி தலைமை தாங்க உத்தரவிட்டார். அதன்படி, அந்த அதிகாரி விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி டிசம்பர் 18, 2019 அன்று ஒரு முழுமையான அறிக்கையை அப்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து 2020 ஜனவரி 13ம் தேதி விஜிலென்ஸ் கமிஷனருக்கு அனுப்பினார். கமிஷனரும் இந்த அறிக்கைக்கு 2020 ஜனவரி 18ம் தேதி ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு, ஜனவரி 22, 2020 அன்று தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அமைச்சருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டது “இப்போது, ​​அரசாங்கம் மாறியுள்ளதால் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்க முடியாது” என்று வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார்.

2018 முதல் நிலுவையில் உள்ள மனுக்களில் எதிலும் தீர்ப்பளிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், முகுல் ரோஹத்கியின் கருத்தில் உடன்படவில்லை என்றும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுவது போல எளிமையானதல்ல என்றும் கூறினார். மேலும், இந்த பிரச்சினை மிகப்பெரிய ஆவணங்களை சார்ந்து இருப்பதால் உறுதியான விசாரணை மீண்டும் தொடங்கும் போதெல்லாம் அவர் வழக்கில் வாதிட விரும்புவதாகக் கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Chennai High Court Dmk Sp Velumani Rs Bharathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment