ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்.
முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்த்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள் சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும். அதிலுள்ளதுளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் ‘பேக்’ செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் சூழ்நிலை உருவாகிஉள்ளது. சிட்டுக் குருவி உள்பட அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பதற்குஅனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
பாதுகாப்போம்…
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மதுரை அரசு பார்மஸி கல்லுாரி மாணவர்களை பின்பற்றி மாநகராட்சி சார்பில் தினமும் நுாறு லிட்டர் கொரோனா சானிட்டைஸர் தயாரிக்கும் பணி துவங்கியது. கொரோனாவால் சானிட்டைஸர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் சானிட்டைஸர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனை தேவையை சமாளிக்க பார்மஸி கல்லுாரி மாணவர்களே சானிட்டைஸர் தயாரிக்கின்றனர்.சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் கூறியதாவது: ஐஸோ பிரோபைல் ஆல்கஹால், கிளிசைரல், ஹைட்ரஜன்பெர்ராக்ஸைடு, டிசில்டு வாட்டர் மூலம் சானிட்டைஸர் தயாரிக்கப்படுகிறது. 200 மில்லி பாட்டில்களில் தினமும் 100 லிட்டர் தயாராகிறது. உற்பத்தி செய்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை பயன்படுத்தலாம், என்றார்.
வரவேற்கத்தக்க முயற்சி..
ஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே…
ஹாய் கைய்ஸ் : இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்…இல்லையேல் நகரமே நரகம் தான்
கொரோனா பரவி வருவதால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள, ஏர் இந்தியா, இன்டிகோ நிறுவன ஊழியர்களின் ஊதியங்களை குறைக்க அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் ‘கொரோனா’வால் சர்வதேச விமான சேவைகளை பெருமளவு குறைத்து விட்டது. இதனால் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம் இழப்பை சமாளிக்க ஊழியர்களின் ஊதியத்தில் 5 சதவீதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
பாவம்
‘கொரோனா’ வைரஸ் பீதியால், முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்களை, பயணியர் ரத்து செய்து வரும் நிலையில், வரும், 31ம் தேதி வரை, 155 ரயில்களின் சேவையை, இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்களில், ‘கேன்டீன்’களில் பணி புரியும் ஊழியர்களுக்கு, மிகக் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டவர்களை, பணிக்கு நியமிக்கக் கூடாது என, உத்தரவிடப் பட்டுள்ளது.ர யில்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து, முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil