Advertisment

#RIPSridevi பட்டாசு பூமி டூ பாலிவுட்... ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்

ஸ்ரீதேவி... பாலிவுட்டை கலக்கிய இந்தப் புயல் புறப்பட்ட இடம், சிவகாசி! பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற அந்த ஊரிலிருந்து போய்தான் மத்தாப்பாய் ஜொலித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sridevi Native Sivakasi, Crackers Area, Bollywood

Sridevi Native Sivakasi, Crackers Area, Bollywood

ஸ்ரீதேவி... பாலிவுட்டை கலக்கிய இந்தப் புயல் புறப்பட்ட இடம், கந்தக பூமியான சிவகாசி! பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற அந்த ஊரிலிருந்து போய்தான் மத்தாப்பாய் ஜொலித்தார்.

Advertisment

ஸ்ரீதேவியின் மரணத்தை இன்னமும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. 54 வயதில் துபாயில் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இடத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததை நம்பவே முடியவில்லை. உடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி என தனது உடல் நலத்தைப் பேணுவதில் அவ்வளவு ஆர்வம் கொண்டவர் ஸ்ரீதேவி. அவருக்கு ஏன் இந்த வயதில் மாரடைப்பு என்பது அதிர்ச்சி அதிகரிக்க காரணம்!

ஸ்ரீதேவியின் ஊர், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி. இவரது தந்தை பெயர் அய்யப்பன். தாயார், ராஜேஸ்வரி! 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தவர் ஸ்ரீதேவி. 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகுக்கு அறிமுகமானார். 1976-ல் வெளியான கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ இவரை கதாநாயகியாக உயர்த்திய படம்!

பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’தான் ஸ்ரீதேவியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதில் அவர் நடித்த ‘மயிலு’ கதாபாத்திரம், இன்றளவும் பேசப்படுகிறது. தமிழில் அப்போதைய முன்னணி ஹீரோக்களான கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி.

தமிழில் நம் நாடு (1969), குமார சம்பவம் (1969), மூன்று முடிச்சு (1976), காயத்ரி (1977), கவிக்குயில் (1977), மனிதரில் இத்தனை நிறங்களா (1978), முடிசூடா மன்னன் (1978), பைலட் பிரேம்நாத் (1978), மூன்றாம் பிறை (1983) ஆகியவை ஸ்ரீதேவி முத்திரை பதித்த குறிப்பிடத்தக்க படங்கள்!

பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மலையாளத்தில் ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த திரைப்படங்கள் ஆகும்.

1978-ம் ஆண்டு ஸ்ரீதேவி இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான ‘சோல்வா சாவன்’ வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான ‘ஹிம்மத்வாலா’ பெரும் வெற்றி பெற்றது. அதன் மூலமாக இந்தி திரைப்பட உலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் ஸ்ரீதேவி.

தொடர்ந்து, ‘சத்மா’ பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித் தந்தது.1980-களில் சிறந்த நடிகையாக அனைவராலும் கொண்டாடப்பட்டார் ஸ்ரீதேவி. ‘சாந்தினி’ வெற்றி மூலமாக கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்கிற அந்தஸ்தை எட்டினார்.

ஹிம்மத்தவாலா (1983), ஜஸ்டிஸ் சௌத்ரி (1983), கலாக்கார் (1983), சத்மா (1983), இன்கிலாப் (1984), ஜாக் உட்டா இன்சான் (1984), நயா கதம் (1984), மக்சத் (1984), தோபா (1984), பலிதான் (1985), மாஸ்டர்ஜி (1985), சர்ஃபரோஷ் (1985), பகவான் தாதா (1986), தர்ம அதிகாரி (1986), நகினா (1986), ஜான்பாஸ் (1986), கர்ம (1986), சுஹாகன் (1986), ஔலாத் (1987), மிஸ்டர் இந்தியா (1987), சால்பாஸ் (1989), சாந்தினி (1989), பந்ஜாரன் (1991) ஆகியன ஸ்ரீதேவியின் பிரசித்தி பெற்ற திரைப்படங்கள்!

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’, திரை உலகில் பல சாதனைகளை படைத்தது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவியின் நடிப்பு அனைவரையும் வியக்கவைத்தது!

ஸ்ரீதேவி தனது தந்தையை ‘லம்ஹே’ திரைப்பட படப்பிடிப்பின் போதும், தாயாரை ‘ஜூடாய்’ படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்ததால், நடைமுறை வாழ்வில் பல சவால்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

1980-களின் மையப் பகுதியில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து வதந்திகள் பரவின. மிதுன் சக்ரவர்த்தி தனது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என அறிவித்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனர் அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012-ம் அண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு, 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. பிலிம்பேர் விருது (தெற்கு) ‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, ‘சால்பாஸ்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, ‘லம்ஹே’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

நந்தி விருது, ‘க்ஷன க்ஷனம்’ என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது. MAMI விருது, இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல் மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.ம்‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை ‘தேவராகம்’ படத்திற்காக வழங்கியது.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment