மறக்க முடியுமா அந்நாளை.. பேருந்தின் ஓட்டையில் விழுந்து இறந்த சிறுமிக்கு 6 ஆண்டுகள் ஆகியும் மறுக்கப்படும் நீதி?

தந்தை மற்று தாய் இழப்புகளையும், சவால்களையும் தாங்கியபடி நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் பள்ளி பேருந்தின் ஓட்டையில் இருந்து சிறுமி ஸ்ருதி கொடூரமாக உயிரிழந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கு சிறுமிக்கு தான் இப்படி இறந்து விடும் என்று யோகித்து கூட இருக்க முடியாது.

சிறுமி ஸ்ருதி வழக்கு:

தாம்பரத்தில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜூலை 25 2012 ஆம் ஆண்டு பள்ளி பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எந்த பேருந்தில் காலை ஸ்ருதியின் பெற்றோர்கள் தனது மகளை ஆசையாக அனுப்பி வைத்தார்களோ.. அதே பேருந்து ஸ்ருதிக்கு எமனாக மாறியது.

பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்திருந்த ஒட்டுனரின் அலட்சியம்,குழந்தைகள் செல்லும் பேருந்தை சரியாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம், இவ்வளவு மோசமான பேருந்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிய வாகன ஆய்வாளர் இவர்கள் அனைவரின் கவனக் குறைவு தான் சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்கு காரணம் என்பது ஊரு அறிந்த ஒன்று.

ஆனால் அதை இப்போது வரை நிரூபிக்க முடியாததால், சிறுமி இறந்து 6 வருடங்கள் கழித்து அவருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஸ்ருதியின் தந்தையும் பள்ளி பேருந்து டிரைவர் தான்.

மற்ற குழந்தைகளை பத்திரமாக வீடு சேர்க்கும் அவருக்கு, தனது மகள் பள்ளி பேருந்தில் இறந்த செய்தி இடிப்போல் விழுந்தது. சிறுமி ஸ்ருதி இறந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இன்று வரை அவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை சிறுமியின் பெற்றோர்களால் வாங்கி தர முடியவில்லை.

இந்த சம்பவம் நடந்த சமயத்தில் எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். பள்ளி வாகனங்களில் முறையாகப் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவு வந்த பிறகு பள்ளி வாகனங்களை எல்லாம் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாகச் சோதனையிட்டனர். ஒரு இறப்புக்கு பிறகு தான் சோதனைகளும், கட்டுபாடுகளும் அதிகரித்தது.

சிறுமி ஸ்ருதி

ஸ்ருதியின் தாய்

சில மாதங்கள் கழித்து கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி நிர்வாகம் உடனடியாக ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். சமீபத்தில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பி.என் பிரகாஷ் இந்த வழக்கை விசாரித்தார். ஸ்ருதியின் குடும்பத்தினர் மற்று பள்லி நிர்வாகம், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

வழக்கம் போல் பள்ளி நிர்வாகம் , வாகனத்தை பழுதுப்பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டினர். அந்த நிர்வாகம் வாகனத்தில் இருந்த ஓட்டைடை பார்த்தும் பலகை போட்டு மூடிய டிரைவர் மீது பழியை சுமத்தியது.

இப்படி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வாதாடிய வழக்கறிஞர்கள் மாறிமாறி வாதிக்க, இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கை அடுத்த விசாரணைக்கு ஒத்தி வைத்தார். ஆறாண்டுகள் கடந்தும் போராடிக் கொண்டிருக்கும் ஸ்ருதியின் தந்தை மற்று தாய் இழப்புகளையும், சவால்களையும் தாங்கியபடி நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close