திரைப்பயணத்தில் கேப்டனுடன் அன்றே கைகோர்த்த ஸ்டாலின்!

தி.மு.க சார்பில் வெளியான ‘முடியட்டும் விடியட்டும்’ குறும்படத்திலும் அவர்தான் ஹீரோ.

நன்கு யோசித்து பார்த்தால் தெரியும். தமிகத்தின் அரசியல் பெருந்துதலைகள் எல்லாம் நேரடியாகவோ அல்லது சற்று மறைமுகமாகவோ தமிழ் சினிமாவில் இருந்து தான் வந்துள்ளனர் என்று. அந்த லிஸ்டில் முக ஸ்டாலினும் தப்பவில்லை.

ஸ்டாலின் நடித்த படங்கள்:

தந்தையைப் போலவே ஸ்டாலினும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுப்பாட்டின் உச்சமாய் திரைப்படங்களிலும் நாடகங்களிலும், ஸ்டாலின் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு”.

இந்த நாடகம் கலைஞர் கருணாநிதி தலைமையிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். ஸ்டாலின் நடித்த நாடகங்கள் வெற்றி விழாவும் கண்டுள்ளனர்.

ஸ்டாலின்

ஒரே ரத்தம் படத்தில் ஸ்டாலின்

இதில் கிடைத்த அனுபவங்களை வைத்து ஸ்டாலின் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி சீரியலிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரண்டு திரைப்படங்களிலும் நடித்தார் ஸ்டாலின். 1988ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒரே ரத்தம்’ என்ற படத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடும் ஹிரோ தான் ஸ்டாலின்.இந்த திரைப்படத்தில் ஸ்டாலினின் கதாப்பாத்திரப் பெயர் ‘நந்தக்குமார்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுகின்ற, நகரம் சென்று கல்விகற்ற புரட்சியாளன் கதாபாத்திரம் ஸ்டாலினுக்கு. எனினும், படத்தில் அவர் உயிர்விடுகிற காட்சிகளில் கண்ணீர் விட்டுக் கதறிய தொண்டர்கள் ஏராளம்.

மக்கள் ஆணையிட்டால் ஸ்டாலின் வாழ்க்கையில் மறக்ல முடியாத படம். ராமநாராயனன் இயக்கத்திக் கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெளிவந்த இந்த படத்தில் ஸ்டாலின் கேப்டன் விஜயகாந்த் உடன் நடித்திருந்தார். தி.மு.க-வின் மூத்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் முதன்முதலில் நடிகராகத்தான் அறிமுகமானார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மக்கள் ஆணையிட்டால் படத்தில் ’ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாருங்க’ பாடல் இன்றும் தி.மு.க-வின் தேர்தல் பிரசார பாடல்களில் ஒலித்து வருகிறது. குறிஞ்சி மலரில் நடித்தபோது மு.க.ஸ்டாலினின் வயது 37. 13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். குறிஞ்சி மலரின் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். பூரணியின் அரசியல் வாழ்வுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தன் இன்னுயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரம்தான் ஸ்டாலின் நடித்த ‘அரவிந்தன்’ கேரக்டர்.

மு.க.ஸ்டாலினின் திரைப்பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. கடந்த தேர்தல் பிரசார காலத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தி.மு.க சார்பில் வெளியான ‘முடியட்டும் விடியட்டும்’ குறும்படத்திலும் அவர்தான் ஹீரோ. இப்படி தந்தைப் போல் சினிமா, போராட்டம், புரட்சி, கட்சி என படிப்படியாக உயர்ந்து கடைசியில் திமுகவின் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close