Advertisment

பாரதிதாசன் பல்கலை முன்பு வரும் 30- ஆம் தேதி பட்டம் விடும் போராட்டம் - மாணவர் சங்கம் அறிவிப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் பட்டம் விடும் போராட்டம் அறிவிப்பு விடுத்துள்ளது.

author-image
WebDesk
Aug 22, 2023 21:47 IST
Students federation of India announces kite flying protest, Students federation of India announces kite flying protest, Bharathidasan University, பாரதிதாசன் பல்கலை முன்பு ஆக. 30-ம் தேதி பட்டம் விடும் போராட்டம், மாணவர் சங்கம் அறிவிப்பு, Students federation of India, students kite flying protest at Bharathidasan University

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் பட்டம் விடும் போராட்ட அறிவிப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் மோகன் நம்மிடம் தெரிவிக்கையில்; தமிழ்நாட்டில் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தின் ஒன்றான பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல், சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெறும்பூரிலும் இயங்கி வருகின்றன.

Advertisment

இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை சார்ந்து உள்ள டெல்டா மாவட்டங்களான

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

கரூர் - கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

அரியலூர் அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

நாகப்பட்டிணம் நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்,

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சி செலுத்தி வருகிறது.

publive-image

இதில் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும், 11 அரசு உதவிபெரும் கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

இப்பல்கலைகழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் விவசாயம் மற்றும் தினக்கூலி சார்ந்த பெற்றோர்களின் ஏழை எளிய மாணவர்களாக திகழ்கின்றனர். மிகப்பெரிய ஆளுமையும் கடமையும் பொறுப்பும் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுமார் மூன்று ஆண்டுகளாக அதாவது 5 லட்சம் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் இருக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது மாணவர்களுக்கு பட்ட அழைப்பு விழா நடத்துவதற்கு தமிழ்நாடு ஆளுநர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர். என். ரவி உரிய அனுமதி வழங்காமல் இருக்கிறார் என கூறுகின்றனர்.

மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவின் கையெழுத்து இடாமல் மருத்துவ மாணவர்களின் உயிரை பறிக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த ஏழை எளிய மாணவர்களுக்கு முறையான பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருகிறார். இதனால் பட்டம் படித்த மாணவர்கள் அவர்களுக்கு உரிய பட்டம் கிடைக்காமல் இருப்பதால் படித்து முடித்த படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழக அரசு உயர் கல்வித்துறை உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை காக்கும் விதமாக உடனடியாக படித்து முடித்து மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் எனக் கூறி இந்திய மாணவர் சங்கம் வருகின்ற ஆகஸ்ட் 30-08-2023 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு பட்டம் விடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம் என்றார் இந்திய மாணவர் சங்க நிர்வாகி மோகன்குமார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

#Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment