Advertisment

சுஜித் வில்சன் மரணம் : இரங்கல் தெரிவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள்...

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது - முக ஸ்டாலின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sujith Wilson death : Party leaders and cinema celebrities pay tributes

Sujith Wilson death : Party leaders and cinema celebrities pay tributes

Sujith Wilson death leaders and cinema celebrities pay tributes : தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி நேற்று நள்ளிரவு வரை அனைவரின் பிரார்த்தனையும் எப்படியாவது சுஜித் வில்சன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான். வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு 10:30 மணிக்கு பின்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைவரின் நெஞ்சையும் உலுக்கிய ஒன்றாக அமைந்தது. அந்த சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை செய்வதறியாமல் அதே ஆழ்துளைக் கிணற்றில் தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. அதன் பின்பு அழுகிய நிலையில், சிதலமடைந்த சடலமாக இன்று காலை வெளியே கொண்டு வரப்பட்டான் சுஜித். சுஜித்தின் உடலுக்கு ஏற்கனவே அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். களத்தில் நின்று மீட்புப்பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் இன்று காலை சுஜித்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இது தொடர்பான முழுமையான தகவல்களை லைவ் செய்தியில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் தங்களின் இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அது குறித்த அப்டேட்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகுல் காந்தி இரங்கல்

தேசிய அளவில் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது ராகுல் காந்தி இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டும் என்று செய்த பதிவினால் தான். தற்போது இந்த குழந்தை இறந்ததிற்காக இரங்கல்கள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ராகுல்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்

சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது - அமமுக தலைவர் தினகரன்

மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது - திருநாவுக்கரசர்

சுஜித்தின் மரணம் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி. ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை மீட்க புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், எவ்வளவு செலவானாலும் வெளிநாடுகளில் இருந்து மீட்பு கருவிகளை அரசுகள் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

தயாநிதி மாறன்

சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள் - உதயநிதி ஸ்டாலின்

துயரக்குழியில் நாங்கள் விழுந்துவிட்டோம் - நடிகர் விவேக்

மீளமுடியா துயரம் - ஹர்பஜன் சிங்

தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் சுஜித்தை காப்பற்றாமல் போனது வருத்தமளிக்கிறது - எச்.ராஜா

விடை கொடுக்க கூட எங்களுக்கு அருகதை இல்லை - இயக்குநர் சேரன்

பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம் - ஜி.வி. பிரகாஷ்

நடிகை கஸ்தூரி

இனி ஒரு சுஜித்தினை இழக்க மாட்டோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றோம் என நடிகை கஸ்தூரி ட்வீட்

சௌந்தர்யா ரஜினிகாந்த்

இது ஒரு தோல்வி தான் என்று கூற ஒரு சிஸ்டமும் இல்லை - விக்ரம் பிரபு

வைரமுத்துவின் கவிதை அஞ்சலி

 

அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர் என்று கவிதை அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து.

வ்

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment