தமிழக கேபிள் டிவியில் சன் நெட்வர்க் சேனல்கள் ரத்து!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் நேற்று நள்ளிரவு முதல் சன் குழுமத்தின் 25 சேனல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு கேபிள் விஷனில் சன் குழுமம் சேனல்களை ஒளிபரப்ப, உரிய தொகையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை இழுபறியானதால் அரசு கேபிள் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாக, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜூன் 3ம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல், அரசு கேபிள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் இருந்து, சன் நெட்வர்க்கின் அனைத்து சேனல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சன் டி.வி., கே.டி.வி., ஆதித்யா, சன் நியூஸ், உதயா, சூர்யா டி.வி. என, கால் மீடியா விஷன் எனும் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களின் ஒளிபரப்புகளும் ரத்தாகி உள்ளது.

 

×Close
×Close