scorecardresearch

கட்சி யாருடையது என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள்; ஓ.பி.எஸ்

கட்சி யாருக்கு என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

கட்சி யாருடையது என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள்; ஓ.பி.எஸ்

கட்சி யாருக்கு என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று அதிமுக விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு நேற்று முக்கிய தீர்ப்பு வழங்கியது. ஜீலை 11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்து, பன்னீர் செல்வம்  தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த  தீர்ப்பு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் தந்த அருளால் கிடைத்தது என்றும் மாபெரும் நன்மை நடந்திருக்கிறது என்று இ.பி.எஸ் நேற்றைய தினத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வ்ம் பேசியதாவது” இந்த தீர்ப்பு தொடர்பாக விரிவான அறிக்கை வெளிடப்படும். கட்சி யாருக்கு என்று தொண்டர்கள் முடிவு செய்வார்கள்” என்று அவர் கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Supreme court o panner selvam reaction to verdict

Best of Express