புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு 6 மாத அவகாசம்: உச்சநீதிமன்றம்

மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 6 மாத அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

By: Updated: December 4, 2020, 10:04:56 PM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 6 மாத அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஊராட்சி ஒன்றிய கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள், மாநகராட்சி அமைப்புகள் எனத் தனித் தனியாக 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக அறிவித்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறாஇ செய்யப்படவில்லை என்று வழக்கு தொடர்ப்பட்டதால் தமிழக அரசு கடந்த ஆண்டு புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புறா ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தியது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் கிராமப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்,  மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 6 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 6 மாத அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சங்கர் என்பவர் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழக ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும்.

இதில் புதிதாக உருவக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும்.

இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்கானிக்கும் என கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமனியன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன், “தமிழகத்தில் நிலுவையில் இருக்கும், அதாவது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை கிட்டதட்ட முடிந்த நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் தேர்தலை நடத்தும் சூழலும் தற்போது இல்லை. இதைத்தவிர வாக்கு இயந்திரங்களும் போதுமானதாக உடனடியாக வழங்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Supreme court order 6 months time to complete tamilnadu local body elections in new districts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X