Advertisment

ஜெய்பீம் நிஜ கதாநாயகி பார்வதி அம்மாளுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நடிகர் சூர்யா

அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும்போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய் பீம் படம் எடுத்து சென்றுள்ளது.

author-image
WebDesk
New Update
ஜெய்பீம் நிஜ கதாநாயகி பார்வதி அம்மாளுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நடிகர் சூர்யா

அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

குறிப்பாக, இருளர் மற்றும் பழங்குடி மக்கள் குறித்த புரிதலை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விவாதங்களுக்குப் பஞ்சமில்லை. ஒரு சில காட்சிகளால், வன்னியர் சமூகத்தின் கோபத்தை ஜெய்பீம் படம் சம்பாதித்துள்ளது.

இதற்கிடையில், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்.

மாதந்தோறும் வட்டி கிடைக்க பிக்சட் டெபாசிட்

அதற்கு பதிலளித்த சூர்யா, பார்வதி அம்மாவிற்கு மாதந்தோறும் வட்டி காசு கிடைக்கும் வகையில் ரூபாய் 10 லட்சம் வங்கிவைப்பு நிதியாக வழங்க உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று, சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்குப் பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன், உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

15 லட்சம் நிதியுதவி

அப்போது, ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளிடம் நடிகர் சூர்யா, தனது சார்பில் ரூ.10 லட்சம், 2D படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ரூ.5 லட்சம் ஆகியவற்றுக்கான நிரந்தர வைப்புத்தொகை ஆவணங்களை வழங்கினார்.

நடிகர் சூர்யா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன், "ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் ஞானவேலும் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி உள்ளார்.

publive-image

அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும்போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய் பீம் படம் எடுத்து சென்றுள்ளது.

வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் பாராட்டியது மட்டுமல்லாமல் இருளர் சமூக மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே அவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்ட உள்ளோம்"" என தெரிவித்தார்.

நிஜ செங்கேனிக்கு சொந்தமாக வீடு

முன்னதாக, பார்வதி அம்மாளின் வீட்டுக்கு நேரில் சென்ற ராகவா லாரன்ஸ், அவரிடம் நிதியுதவியை வழங்கினார். மேலும், அவரிடம் விரைவில் சொந்தமாக வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Surya Marxist Communist Party Cpi Vanniyar Jai Bhim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment