Advertisment

சுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்! மீண்டும் ஒரு ஆணவக்கொலையா?

இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி ஆற்றில் சடலம்

காவிரி ஆற்றில் சடலம்

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் திருமணமான இளம் தம்பதிகளின் சடலங்கள் கோரமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மீண்டும் ஒரு ஆணவக்கொலையா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி  கிராமத்தை சேர்ந்தவர்கள் நந்தீஸ் மற்றும் சுவாதி.  இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு சுவாதியின்  வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம்,  நந்தீஸ்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரை மருமகனாக ஏற்க முடியாது என்று சுவாதியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி  கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி (சுதந்திர தினம்)  சூலகிரியில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிறகு தங்கள் திருமணத்தை அதிகாரபூர்வமாக பதிவும் செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் ஓசூரில் உள்ள ராம் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர், இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி வெளியில் சென்ற இருவரும் வீடும் திரும்பவில்லை.இதனால் பதற்றமடைந்த நந்தீஸின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் மிதப்பதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கர்நாடகா காவல் துறையினர் கோரமாக மிதந்த இரண்டு சடலங்களையும் மீட்ட்னர்.

அழுகிய நிலையில் இருந்த உடல்களை பார்த்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். பின்பு கர்நாடக காவல்துறையினர், நந்தீஷின் ஆடையில் இருந்த அடையாளங்களை வைத்து தமிழக காவல் துறைக்கு தகவல் அளித்ததில், அந்த இரு உடல்களும் காணாமல் போன சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஷ்-சுவாதி உடல்தான் என்பது உறுதியானது

பிணக்கூறாய்வு மூலம், இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இந்த கொலை ஆணவக்கொலையாக இருக்கும் என்ற நோக்கில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,பெண்ணின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (40), பெண்ணின் பெரியப்பா வெங்கடேஷ் (43), உறவினர் புனுகன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தீஸ் - சுவாதியின் கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் இதுக் குறித்த புகைப்படங்கள் மற்றும் விவாதங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment