Advertisment

இருந்தாலும் டெலிவரிக்காக ராஜஸ்தான் போறதெல்லாம் டூ மச் - ’ஸ்விகி’யின் கடமையுணர்ச்சி!

இதற்கிடையே அவர் ஆர்டர் செய்த உணவும் அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் நல்லவேளை சைனீஸ், தாய், இத்தாலியன் உணவுகளை அவர் ஆர்டர் செய்யவில்லை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Online food delivery apps UberEats, Zomato, Swiggy foods

சில வருடங்களுக்கு முன்பு வரை, பணிச்சுமையால் வீட்டில் சமைக்க நேரம் இல்லாதவர்களும், பேச்சுலர்களும் உணவிற்காக ஹோட்டல்களில் தஞ்சம் அடைந்தார்கள். ஆனால் இப்போது ஹோம் டெலிவரி சேவைகளால் ஹோட்டலுக்கு செல்லும் நேரமும் மிச்சம்.

Advertisment

ஆன்லைன் டெலிவரி சேவையில் மிக முக்கியமானது ‘ஸ்விகி’.  இந்த ‘ஆப்’ மூலம் சென்னையைச் சேர்ந்த பார்கவ் ராஜன் என்பவர் வட இந்திய உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன் விலை ரூ.138. வட இந்திய உணவு என்றதும், அவர் ஆர்டர் செய்த உணவகத்தின் பெயரில் இருக்கும் ராஜஸ்தான் உணவகத்துக்கு அந்த ஆர்டர் சென்றிருக்கிறது. ”நீங்கள் ஆர்டர் செய்த சுவையான உணவு இன்னும் 12 நிமிடத்தில் உங்களிடம் வந்து சேரும்” என ஸ்விகி தரப்பிலிருந்து பார்கவ் ராஜனுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. தவிர, இந்த ஆர்டரை டெலிவரி செய்யும் படி, பிரபாகரன் எனும் ஊழியருக்கும் ஆர்டரும் போடப்பட்டிருக்கிறது.

லொகேஷனை செக் செய்த பார்கவ் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். ”வாவ் ஸ்விகி எங்க போறீங்க” என்ற கேப்ஷனுடன் அந்த லொகேஷனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்யவும், சற்று நேரத்தில் வைரலாகியிருக்கிறது அந்த ட்வீட்.

"வட இந்திய உணவை ஆர்டர் செய்தால், வட இந்தியாவிற்க்கே சென்று வாங்கி வரும் ஸ்விகி வாழ்க" என பல்வேறு ட்வீட்களால் ஸ்விகியை வாழ்த்தினார்கள் நெட்டிசன்கள்.

சற்று நேரத்தில் அதற்கு பதிலளித்த ஸ்விகி நிறுவனம், “இதனை கடவுள் தான் குறும்பாக நிகழ்த்தியிருக்கிறார். இருப்பினும் இந்தப் பிரச்னையை மிகுந்த அழுத்தத்தோடு கவனத்தில் கொண்டுள்ளோம். இது போன்ற பிரச்னைகள் வருங்காலத்தில் வராதவாறு ஈடுபாட்டுடன் உழைப்போம். இதனை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அவர் ஆர்டர் செய்த உணவும் அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் நல்லவேளை சைனீஸ், தாய், இத்தாலியன் உணவுகளை அவர் ஆர்டர் செய்யவில்லை!

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment