Advertisment

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மரணம்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

author-image
WebDesk
New Update
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மரணம்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 7) மரணமடைந்தார். அவருக்கு வயது 68. இயக்குநர் விசு மூலம் தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் படம் மூலம் அறிமுகமானார். விவேக், வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானர். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் நடித்து வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பலரின் படங்களில் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். இவரின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. சிவ நாராயணமூர்த்தி மறைவுக்கு திரைத்துறையினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment