கோவை பாஜக தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிசிடிவியில் பதிவான காட்சி!

இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

By: March 21, 2018, 11:25:16 AM

கோவையில் இன்று காலை பா.ஜ.க, மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் பா.ஜ.க, மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் இனோவா கார் பலத்த சேதமடைந்தது. இதை அவரின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை – செல்வபுரத்தில் இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களால் பரபரப்பு நிலவி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil bjp leader petrol bomb at the coimbatore cctv footage of the cast

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X