Advertisment

கொரோனா தொற்று; நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்

1980 களின் ஆரம்பத்தில் தனது சகோதரரும், நகைச்சுகை நடிகருமான இடிச்சபுளி செல்வராஜின் துணையுடன் கரையெல்லாம் செண்பக பூ படம் மூலம் தங்கராசு எனும் கதாபாத்திரத்தில் சினிமாவுக்குள் நுழைந்தார்.

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்று; நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்

Actor Pandu dies of Corona Tamil News : பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

Advertisment

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் பாண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். பாண்டுவை அடுத்து, அவரது மனைவி குமுதாவுக்கும் தொற்று உறுதியானது. இருவரும் கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்தார். பாண்டுவின் மனைவி குமுதா தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

1980 களின் ஆரம்பத்தில் தனது சகோதரரும், நகைச்சுகை நடிகருமான இடிச்சபுளி செல்வராஜின் துணையுடன் கரையெல்லாம் செண்பக பூ படம் மூலம் தங்கராசு எனும் கதாபாத்திரத்தில் சினிமாவுக்குள் நுழைந்தார். இதுவரை, சுமார் 100 படங்களில் பாண்டு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பாண்டுவின் வாய் அசைவுகளும், உச்சரிப்பும் அவரை திரைத்துறையில் நிலைபெறச் செய்தது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போக்கிரி படத்தில் அவர் வாய் அசைவுக் காட்சிகள் சூப்பர் ஹிட் காட்சிகளாக ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்தது.

பாண்டு, குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு, பிந்து என மூன்று மகன்கள் உள்ளனர். நடிகர் பாண்டு, கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் வடிவமைப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். தமிழ் திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்துள்ளார் பாண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதிமுக வின் கொடியை வடிவமைத்தது நான் தான் என பாண்டு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பாண்டுவின் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார், ‘சிறந்த குணச்சித்திர நடிகரும், என்னுடன் பல திரைப்படங்களில் உடன் நடித்தவரும், நல்ல நண்பருமான பாண்டு மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’, என ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment