scorecardresearch

புதுச்சேரியில் அரசு சார்பில் கலைஞருக்கு சிலை : முதல்வர் ரங்கசாமி உறுதி

கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இன்று மீண்டும் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் அரசு சார்பில் கலைஞருக்கு சிலை : முதல்வர் ரங்கசாமி உறுதி

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

அரசு சார்பில் திமுக தலைவர் கலைஞருக்கு மிக விரைவில் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சரங்கசாமி இன்று திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் உறுதி அளித்துள்ளார்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரியில் சிலை அமைக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இன்று மீண்டும் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். கடந்த 4ம் ஆண்டு நினைவு தினத்திலும் முதல்வரை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம்.சிலை அமைப்பதாக முதல்வர் ரங்கசாமி அப்போது உறுதி தந்தார்.

ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காதது வருத்தம் தருகிறது. வரக்கூடிய கருணாநிதியின் நினைவு நாளுக்குள் புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மீண்டும் மனு தந்தோம். சிலையை வைப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil kalaignar karunanithi statue in puducherry cm rangasamy