Advertisment

Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகப்பை இல்லா தின' நிகழ்ச்சி ரத்து

Tamil News Today LIVE, 10 February 2022, Tamil Nadu Latest News, Breaking News Today in Tamil,  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகப்பை இல்லா தின' நிகழ்ச்சி ரத்து

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 98-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

India News Update: செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

UP Election: உத்தரப் பிரேதச சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Tamilnadu Corona update: தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “



  • 22:31 (IST) 10 Feb 2022
    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம்

    தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது



  • 22:11 (IST) 10 Feb 2022
    அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் 24 அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் 24 பேர், நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்



  • 22:07 (IST) 10 Feb 2022
    பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகப்பை இல்லா தின' நிகழ்ச்சி ரத்து

    மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய வேண்டியுள்ளதால், வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகப்பை இல்லா தின' நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்



  • 20:58 (IST) 10 Feb 2022
    ஆதாரங்களை அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது ஏன்? -அண்ணாமலை

    ஏழைகளுக்காக உழைக்கும் எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பாஜக அஞ்சாது. ஆதாரங்களை அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது ஏன்? குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள் என தெரியவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • 20:31 (IST) 10 Feb 2022
    தமிழகத்தில் மேலும் 3,592 பேருக்கு கொரோனா; 25 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 20:20 (IST) 10 Feb 2022
    அதிமுக வேட்பாளர் மரணத்திற்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணத்திற்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர்



  • 20:07 (IST) 10 Feb 2022
    பாஜக மாநில அலுவலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது – ஓபிஎஸ்

    ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வண்ணம் பாஜக மாநில அலுவலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • 19:59 (IST) 10 Feb 2022
    காங்கிரஸ் ஆட்சியில் இருண்டு கிடந்த கிராமங்கள், பாஜக ஆட்சியில் மின்மயமாக்கப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்

    காங்கிரஸ் ஆட்சியில் இருண்டு கிடந்த கிராமங்கள், பாஜக ஆட்சியில் மின்மயமாக்கப்பட்டுள்ளன என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்



  • 19:38 (IST) 10 Feb 2022
    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்



  • 19:20 (IST) 10 Feb 2022
    மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம் - இந்திய தேர்தல் ஆணையம்

    மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27க்கு பதிலாக 28ஆம் தேதி நடைபெறும். 2ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3க்கு பதிலாக மார்ச் 5ம் தேதி நடைபெறும்.



  • 18:41 (IST) 10 Feb 2022
    தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் - ஸ்டாலின்

    தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.



  • 18:28 (IST) 10 Feb 2022
    ரஜினிகாந்தின் புதிய பட அறிவிப்பு வெளியீடு

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ புதிய திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. ‘தலைவர் 169’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



  • 17:57 (IST) 10 Feb 2022
    செய்த ஊழல்களை மறைக்க தினமும் பொய் சொல்லி வருகிறார் இ.பி.எஸ்; ஸ்டாலின் கடும் விமர்சனம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் சொல்லும் பழனிசாமி என மக்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பொய் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • 17:33 (IST) 10 Feb 2022
    ஹிஜாப் விகாரம்: தீர்ப்பு வரும்வரை மத அடையாள உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை - ஐகோர்ட்

    ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.



  • 17:29 (IST) 10 Feb 2022
    ஹிஜாப் விகாரம்: தீர்ப்பு வரும்வரை மத அடையாள உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை - ஐகோர்ட்

    ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.



  • 16:48 (IST) 10 Feb 2022
    ஹிஜாப் விவகாரத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது துரதிருஷ்டவசமானது - அஜித் பவார்

    ஹிஜாப் விவகாரத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது துரதிருஷ்டவசமானது. இந்திய கலாச்சாரமும், அரசியலமைப்பும் சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க கற்றுக்கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார்.



  • 16:46 (IST) 10 Feb 2022
    பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

    அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிரசவ வார்டில் உயிரிழந்த பிரியா என்ற பெண்ணின் கணவருக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:45 (IST) 10 Feb 2022
    பிப்.26 அன்று புத்தகமில்லா தினம்

    6 - 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகமில்லா தினத்தை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



  • 16:43 (IST) 10 Feb 2022
    வலிமை டிரெய்லரை வெளியிடும் பிரபலங்கள்

    அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் இந்தி ட்ரெய்லரை அஜய் தேவ்கனும், தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் மகேஷ் பாபுவும், கன்னட ட்ரெய்லரை கிச்சா சுதீப்பும் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகின்றனர்!



  • 16:09 (IST) 10 Feb 2022
    வைரம் முக்கியமா? சானிடரி நாப்கின் முக்கியமா? திமுக எம்பி கேள்வி

    ஜிஎஸ்டி வரிவிதிப்பில், வைரத்திற்கு 5 சதவீதம் மற்றும் சானிடரி நாப்கின்க்கு 12 சதவீத வரி குறித்து பேசிய திமுக எம்பி அப்துல்லா, ஒரு பெண்ணுக்கு வைரம் முக்கியமா அல்லது சானிடரி நாப்கின் முக்கியமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 16:06 (IST) 10 Feb 2022
    இந்த க்ருணால் 100 சதவீதம் ஆட்டத்தை முடித்து தருவான் - க்ருணால் பாண்டியா

    வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ந் தேதிகளில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், இந்த க்ருணால் பாண்டியா 100 சதவீதம் ஆட்டத்தை முடித்து தருவான் இது அதீத நம்பிக்கை இல்லை என்மேல் நான் வைத்துள்ள நம்பிக்கை என்று க்ருணால் பாண்டியா கூறியுள்ளார்.



  • 16:03 (IST) 10 Feb 2022
    இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான தளர்வுகள் அறிவிப்பு

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லை! இந்த தளவுவு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது



  • 16:00 (IST) 10 Feb 2022
    ஹிஜாப் வழக்கு விசாரணை

    ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது



  • 15:54 (IST) 10 Feb 2022
    இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தகவல்

    இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



  • 15:25 (IST) 10 Feb 2022
    சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை உயர்த்தியது ஏர்டெல்

    சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை ரூ.163-லிருந்து ரூ.200ஆக உயர்த்தியது ஏர்டெல். அடுத்த 3-4 மாதங்களுக்கு பிறகு சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 14:40 (IST) 10 Feb 2022
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு

    அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக 36வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.



  • 13:55 (IST) 10 Feb 2022
    பாஜகவில் இணைந்த தி கிரேட் காளி

    பிரபல WWE மல்யுத்த வீரரான கிரேட் காளி எனப்படும் தலிப் சிங் ராணா டெல்லியில் பாஜகவில் இணைந்தார்



  • 13:53 (IST) 10 Feb 2022
    ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின்!

    லக்கிம்பூர் கேரி விவசாயிகள் பேரணியில் கார் ஏற்றி விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.



  • 13:14 (IST) 10 Feb 2022
    7 நாட்கள் தனிமை கட்டாயம் இல்லை

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 12:52 (IST) 10 Feb 2022
    கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை

    கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை ஆனால் உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் உணவுப் பொருட்களை கோயில் வளாகத்திற்கு வெளியே விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது



  • 12:48 (IST) 10 Feb 2022
    பிரதமர் உரை ஒளிபரப்பு - விதிமுறை மீறல்கள் இல்லை

    கேதர்நாத் கோவிலில் ஆதிசங்கர் சிலை திறப்பு நிகழ்வின் போது பேசிய மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல்கள் இல்லை என்றும், மத்திய அரசின் உத்தரவுபடி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது; அது அரசியல் அல்ல, ஆன்மீக நிகழ்ச்சி தான் என்றும் கூறப்பட்டுள்ளது.



  • 12:46 (IST) 10 Feb 2022
    சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புக்கு மதிமுக ஆதரவு - வைகோ

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமூக நீதி கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என்றும் அறிவிப்பு.



  • 12:24 (IST) 10 Feb 2022
    திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி

    காவல்துறையினர், ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்றும், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • 12:21 (IST) 10 Feb 2022
    வானிலை அறிக்கை

    தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 11:45 (IST) 10 Feb 2022
    பெட்ரோல் குண்டு வீச்சு - என்ஐஏ விசாரணை தேவை - அண்ணாமலை

    சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை



  • 11:42 (IST) 10 Feb 2022
    மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா?

    மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என உயர் நீதிமன்றம் கேள்வி. நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றிற்காக போராடுவது எல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை



  • 11:22 (IST) 10 Feb 2022
    பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல். முருகன் கண்டனம்

    சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியது யாராக இருந்தாலும் தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் பேச்சு.



  • 11:15 (IST) 10 Feb 2022
    ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று கூறி நீதிபதி ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார்.



  • 11:00 (IST) 10 Feb 2022
    பொதுத் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு

    10 மற்றும் +2 வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் நேரடி முறையில் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.



  • 10:44 (IST) 10 Feb 2022
    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு

    முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவக்குழுவை எய்ம்ஸ் அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு விசாரணை ஆணையத்திற்கு உதவும்.



  • 10:43 (IST) 10 Feb 2022
    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு

    முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவக்குழுவை எய்ம்ஸ் அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு விசாரணை ஆணையத்திற்கு உதவும்.



  • 10:28 (IST) 10 Feb 2022
    அனைவரும் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி

    அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் என்று உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு காங். எம்.பி., ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.



  • 10:28 (IST) 10 Feb 2022
    நகர்ப்புற உளளாட்சித் தேர்தல்: சென்னையில் பறக்கும் படைகள்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சென்னையில் பறக்கும் படைகள் களமிறங்கியுள்ளன.



  • 10:13 (IST) 10 Feb 2022
    வாக்களிக்க பணம்: அதிமுக நிர்வாகிகள் கைது

    மதுரை வடக்கு வாசல் பகுதியில் வாக்களிக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக நிர்வாகிகள் மேகலா, சந்திரகாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



  • 09:53 (IST) 10 Feb 2022
    மக்களை ஏமாற்றியது திமுக - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். அதிமுக சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுமாறும் கட்சியினரிடம் அவர் கோரினார்.



  • 09:45 (IST) 10 Feb 2022
    ராமானுஜர் சிலை சீனாவில் தயாரித்தது: ராகுல் காந்தி சாடல்

    ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.



  • 09:43 (IST) 10 Feb 2022
    ராமானுஜர் சிலை சீனாவில் தயாரித்தது: ராகுல் காந்தி சாடல்

    ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.



  • 09:40 (IST) 10 Feb 2022
    ட்ரோன் இறக்குமதி செய்ய தடை

    வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 09:35 (IST) 10 Feb 2022
    கோகுல்ராஜ் வழக்கில் மார்ச் 5 தீர்ப்பு?

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015 இல் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் 5-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 09:34 (IST) 10 Feb 2022
    கோகுல்ராஜ் வழக்கில் மார்ச் 5 தீர்ப்பு?

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015 இல் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் 5-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 09:29 (IST) 10 Feb 2022
    நாட்டில் 1,241 பேர் கொரோனாவால் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,241 பேர் உயிரிழந்தனர். அதே நேரம், 1,67,882 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



  • 09:19 (IST) 10 Feb 2022
    சிவகார்த்திகேயன் புதிய பட ஷூட்டிங் இன்று தொடக்கம்

    நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.



  • 09:05 (IST) 10 Feb 2022
    காணொலி முறையில் ஈரோட்டில் முதல்வர் பிரசாரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்கிறார்.



  • 08:56 (IST) 10 Feb 2022
    பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

    சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.



  • 08:53 (IST) 10 Feb 2022
    கொரோனா விதிகளை பின்பற்றி வாக்களியுங்கள்: பிரதமர் வேண்டுகோள்

    உத்தரப்பிரதேச வாக்காளர்கள் கொரோனா விதிகளை பின்பற்றி ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என்று அந்த மாநில முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 08:51 (IST) 10 Feb 2022
    சென்னை மாநகரம் மிருகக் காட்சி சாலையா? - உயர்நீதிமன்றம் கேள்வி

    கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம், திறந்தவெளி மிருகக் காட்சி சாலையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • 08:50 (IST) 10 Feb 2022
    இஸ்லாம் இந்தியாவில் தான் சிறுபான்மை: கவிஞர் வைரமுத்து

    கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்குள்ளான நிலையில், ''இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை. ஒடுக்க வேண்டாம்'' என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.



  • 08:49 (IST) 10 Feb 2022
    இஸ்லாம் இந்தியாவில் தான் சிறுபான்மை: கவிஞர் வைரமுத்து

    கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்குள்ளான நிலையில், ''இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை. ஒடுக்க வேண்டாம்'' என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.



Tamil Nadu India Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment