Advertisment

தமிழகத்தில் ரூ1950 கோடி பாரத்நெட் டெண்டர் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கில் பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
Jun 28, 2020 08:18 IST
தமிழகத்தில் ரூ1950 கோடி பாரத்நெட் டெண்டர் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை  (டிபிஐஐடி) தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்திற்கான ரூ .1,950 கோடி டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது. டெண்டரில் குறிப்பிடப்பட்ட    நிபந்தனைகள் ஒருதலைபட்சமுடன் இருப்பதாகவும் தெரிவித்தது.

Advertisment

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஃபினெட்) உடனடியாக அனைத்து ரெண்டர்களையும் ரத்து செய்ய வேண்டும். பழைய டெண்டரில் உள்ள குறைகளை கண்டறிந்து, மீண்டும் டெண்டர் விடப்பட வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர் கே.சண்முகத்திடம் டிபிஐஐடி கடிதம் மூலம்  தெரிவித்தது.

கிராமப் பஞ்சாயத்து அளவில் அங்கன்வாடி, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கில் பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

முன்னதாக, டெண்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக  அறப்போர் இயக்கம் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் மிகவும் சர்ச்சையானது.

பதிவேற்றம் செய்யப்பட்ட டெண்டர் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு கொடுத்த அழுத்தம் காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த 1995-ம் வருட “பேட்ச்” மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி டாக்டர். சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதாக விண்ணப்பித்தார் என்ற செய்திகள் வெளியாகின.

ஜனவரி மாதம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு எழுதிய கடிதத்தில், சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வை குறிப்பிட்டு, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  “திட்டத்தின் (பாரத்நெட்) பொறுப்பாளராக இருந்த பாபு அழுத்தத்திற்கு உள்ளானாரா? இதன் பின்னணியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் செயல்பாடுகள் உள்ளனவா? அதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்க வேண்டும், ”என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

"இருப்பினும், சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வு கோரிக்கை அவரது மூத்த சகாக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக பின்னர் திரும்பப் பெறப்பட்டது. பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பொறுப்பிலிருந்து சந்தோஷ் பாபு மாற்றப்பட்டு, தமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா், நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று  பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாபுவுக்குப் பிறகு, ஐ.ஏ.எஸ் மூத்த அதிகாரியான ஹான்ஸ் ராஜ் வர்மாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் மத்திய அரசுக்கு எழுதிய ஊழல் புகார் கடிதத்தில், “முழு மாநிலமும் கொரோனா பெருந்தொற்றுக்கான போராட்டத்தை முன்னெடுக்கையில், ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஃபினெட்) நிறுவனம் சத்தமில்லாமல் டெண்டரில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. போட்டியைக் கட்டுப்படுத்துவதுடன், சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் நிபந்தனைகள் திருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

#Minister R B Udayakumar #M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment