தமிழக சட்டசபை தேர்தலில் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த நிகழ்வு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டசமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வமுமடன் வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில். சென்னை திருவான்மயூரில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தார். அப்போது ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றால் கோபமான அஜித் ரசிகரின் செல்போனை பறித்த்து பெரும் பரபரப்பை ஏற்படுததியது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நீலாங்கரை வாக்குச்சாடியில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் யாரும் எதிபார்க்காத வகையில் சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அவர் வீட்டில இருந்து சைகிளில் புறப்படுவது முதல் வாக்குச்சாவடிக்கு வந்து சேரும்வரை ஏராளமான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில வைரலாகியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் விஜய் சைக்கிளி வந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டிசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களில் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்தாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ், வாக்குச்சாவடி விஜய்யின் வீட்டிற்கு அருகில் இருப்பதாலும், அங்கு செல்லும் போது சின்ன சின்ன சந்துகளை கடந்து செல்ல வேண்டும். இதனால் காரை நிறுத்த இடம் இருக்காது என்பதால் விஜய் சைக்கிளில் வந்தாகவும், மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நடிகர் விஜய், பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில்தான் நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாக திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil